Sunday, April 16, 2017

ஈஸ்டர் சிந்தனைகள்...

17951632_10208942586217013_4065138277426614119_n.jpg


இன்று கொண்டாடபட்டு கொண்டிருக்கும் ஈஸ்டர் என்பதன் அர்த்தம் வேறு, கிறிஸ்துவிற்கும் அதற்கும் தொடர்பே இல்லை


இயேசு உயிர்த்ததாக சொல்லபடும் அந்த நாளில் மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை ஈஸ்டர் ஆயிற்று


முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது


கிறிஸ்தவம் அந்த கலாச்சாரத்தை, அந்த திருவிழாவினை கிறிஸ்துவின் உயிர்ப்போடு கலந்து எடுத்துகொண்டு அதனை ஈஸ்டர் பண்டிகையாகவே மாற்றிவிட்டது, இது ஈஸ்டர் பெயர் வரலாறு


கிறிஸ்து உயிர்த்து கல்லறையினை விட்டு வெளிவந்ததை யாரும் காணவில்லை, ஆனால் அவரின் கல்லறை வெறுமையாயிருந்தது


இந்த புள்ளியில் அவர் உடல் திருடபட்டது என யூதர்கள் கதைகட்டிவிட்ட பின் இன்றுவரை அந்த இனம் இயேசுவினை எதிர்பார்க்கின்றது, பார்க்கட்டும்


சிலுவையில் இறந்த இயேசு உயிர்த்தார் எங்களுடன் பேசினார் உண்டார் என்ற அவரின் சீடர்கள் நம்பினர், அதன் பின் உலகமும் நம்பியது, ஆனால் சாகுமுன் பகிரங்கமாக போதித்த இயேசு அதன்பின் மக்கள்முன் தோன்றவே இல்லை


அவர் உடலோடே பரலோகம் சென்றார் என்கின்றது கிறிஸ்தவம்


இந்த நிகழ்வுக்கு பின்னரே கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து, வெகு வேகமாக மலர்ந்தது, சுருக்கமாக சொன்னால் உயிர்பெற்று எழுந்தது கிறிஸ்து மட்டும் அல்ல, கிறிஸ்தவமும் கூட‌


வீரியமாக எழும்பிய கிறிஸ்தவம் அன்றைய உலகின் வல்லரசான ரோமானியரின் ஆட்சியினை கைபற்றியதின் தொடக்கபுள்ளி இதுதான்


இந்நாளைய சத்குரு போன்ற சர்ச்சை சாமியார்களுக்கெல்லாம் முன்னோடியான ரஜனீஷ் எனும் ஓஷோ சொல்வார், கிறிஸ்து ஒரு அரசையும் ஏற்படுத்தவில்லை, கிறிஸ்து சொன்னது நடக்கவில்லை, அவர் ஒரு பிராடு என அள்ளிவிடுவார்


ஆனால் அப்படி அல்ல‌,  ஓஷோ சொன்ன பெரிய பொய் அது..


சாதரண யூத இளைஞனின் போதனையும் மரணமும் அவனின் உயிர்ப்பு செய்தியும் பெரும் புரட்சியினை உலகில் ஏற்படுத்தின, ரோமையின் அரசை அது கைபற்றியது


கிட்டதட்ட 1500 ஆண்டு காலம் அது உலகின் வல்லரசாக விளங்கியது, மார்ட்டின் லூத்தராலும் அதனை அசைக்க முடியவில்லை. நெப்போலியன் காலத்தில் அது கொஞ்சம் அசைந்தது


19ம் நூற்றாண்டில்தான் அது பின்னடைவினை சந்தித்திருக்கின்றது, என்றாலும் இன்றுவரை கிறிஸ்துவின் வாரிசான போப்பிற்கு இருக்கும் மரியாதையும், சக்தியும் சாதரணம் அல்ல‌


கிறிஸ்து ஏற்படுத்திய அந்த அரசாலும், அவரின் தாக்கத்தாலும் எல்லா நாடுகளும் பலன் அடைந்தன, இந்தியாவில் கூட மருத்துவ மனைகளும், முல்லைபெரியாறு போன்ற அணைகளும் கட்டபட்டதென்றால் கிறிஸ்துவும் மறைமுக காரணம், அவரின் உயிர்ப்பும் முக்கிய காரணம்


அவர் உயிர்த்தார் என விசுவசிப்பவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவம் அந்த நம்பிக்கையில்தான் இயங்குகின்றது, இல்லையென்றால் பழைய இறைவாக்கினர் வரிசையில் கிறிஸ்துவும் மானிடனாக வரலாற்றில் சேர்ந்திருப்பார்


அந்த மகா முக்கிய, வரலாற்றினை திருப்பி போட்ட நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் எனும் சம்பந்தம் இல்லா பெயரோடு கொண்டாடுகின்றார்கள், அது அவர்கள் நம்பிக்கை


ஈஸ்டர் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


என்ன இருந்தாலும் அந்த இயேசு கிறிஸ்து மீது ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு


உயிர்த்த இயேசு ஒரு நாள் கழித்து உயிர்த்திருக்க கூடாதா? அவர் மிக சரியாக யூத காலண்டர் படி ஞாயிறு எனும் முதல் நாளில்தான் உயிர்த்தார்


யூதருக்கும், தமிழரை போல ஞாயிறுதான் வாரத்தின் முதல்நாள், பெருமாள் பக்தர்களை போல சனிகிழமைதான் ஓய்வுநாள்


ஆனாலும் இயேசு முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா?, கிறிஸ்தவன் ஐரோப்பிய மதம் ஆகி, உலகெல்லாம் பரவும், அப்பொழுது ஞாயிறு விடுமுறையாகும், திங்கள் கிழமை வேலைநாளாகும் என்பது தெரியாதா?


மக்கள் மகிழ்ச்சியாக இருக்க திங்கள் கிழமை உயிர்த்திருக்க கூடாதா? என்ன அவதாரம் இவர்??


யூத வழக்கபடி பாவங்களுக்கு ஒரு ஆடு பலியிடபடும், அப்படி எல்லா மக்களின் பாவங்களுக்காக இயேசு பலியானார் என்கின்றது கிறிஸ்தவம்


அவர் பலியான அன்று ஒரு செம்மறியும் அவருக்காக வெட்டவில்லை, ஆனால் அவர் உயிர்த்த அன்று ஏராளமான ஆடுகள் உயிரை துறந்திருக்கின்றன, கூடவே ஏராளமான கோழிகளுடன் பலியாயிருக்கின்றன‌


அதில் ஒரு ஆடு எனக்காகவும் பலியாகியிருக்கின்றது, அந்த ஆட்டுகறியின் வாசனை வந்தவுடன் ஈஸ்டர் சிந்தனைகள் எல்லாம் விடைபெறுகின்றன‌


ஆட்டுகறிக்கு ஆண்டவனையே மறக்க வைக்கும் சுவை இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது..


பொறுமையில் பெரும் பொறுமை இயேசுவுடையது, அதே பொறுமையினை ஒரு நாள் கழித்து திங்கள் கிழமை அவர் உயிர்த்திருக்கலாம், நன்றாக இருந்திருக்கும்..

No comments:

Post a Comment