Thursday, April 20, 2017

ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு



18011143_10208977639813331_4932205008972470235_n.jpg


 ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வில்லை: அமைச்சர் ஜெயக்குமார்


ஓஹோ..அப்படியானால் பன்னீரை விட பெரும் நிர்பந்தத்தை யாரோ கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதனைத்தான் சொல்லவருகின்றார்.






ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு


ஒரு சாதரண மனிதனுக்கே இதனை நினைத்தாலே கோபம் வரும், ஆளுநர் எப்படி நிதானமாக இருக்கின்றார்?


மானமுள்ள ஆளுநர் என்றால் என்ன சொல்லவேண்டும்?





"ஏம்பா அன்னைக்கு பன்னீர் செல்வத்தை முதல்வராக்கு என வந்தீர்கள்

பின் அவரை நீக்குங்கள் என வந்தீர்கள்

சசிகலாவினை முதல்வராக‌ அழையுங்கள் என்றீர்கள், அதற்குள் அவரை சிறை அழைத்துகொண்டது

பின் எடப்பாடியினை முதல்வராக்கு என திவாகரனோடு வந்தீர்கள்

இப்பொழுது எடப்பாடி வேண்டாம் இன்னொருவர் என வருகின்றீர்கள்?

என்னை பார்க்க ஆளுநர் மாதிரி தெரிகின்றதா? இல்லை சினிமா நடிகர்கள் அனுப்பும் ஏஜண்ட் மாதிரி தெரிகின்றதா? இல்லை ஜவுளிகடை பையன் போல தெரிகின்றதா?

ஏனப்பா உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இதெல்லாம் ஒரு அரசியலா..

இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படி நடக்கின்றதா? உங்கள் கட்சியும் அதன் கோட்பாடும் என்ன பெரிய ம......

இப்படி கண்ணாமூச்சி விளையாடிகொண்டிருந்தால் எப்படி ஆட்சி செய்வீர்கள், எல்கேஜி பையன்கள் போல அல்லவா சுற்றுகின்றீர்கள்,

ஆனால் வேட்டி சட்டை எல்லாம் போட்டிருக்கின்றீர்கள்

4 மாதத்தில் 40 மாற்றங்களா? இது சரிவராது உங்களை விட்டால் நாளொரு மாற்றம் கேட்டுகொண்டே இருப்பீர்கள், உங்கள் ஆட்சி நாசமாய் போக, இதனை கலைக்கின்றேன்..", இனி தேர்தல்தான் என சொல்லமாட்டாரா?

நல்ல மானமுள்ள ஆளுநர் என்றால் சொல்லலாம், இவர் மாண்புமிகு ஆளுநர் அல்லவா? என்ன சொல்லபோகின்றாரோ?

சட்டம் தன் கடமையினை மீறி ஏதாவது செய்து இந்த அதிமுக கேலி கூத்தை நிறுத்தட்டும்..

ஆனாலும் இரட்டை இலையினை மீட்கவே லஞ்சம் கொடுக்க துணிந்த கட்சி இது,

இப்படி அடிக்கடி ஆட்சியமைக்க.....

வேண்டாம் இதற்கு மேல் ஏதும் சொன்னால் சர்ச்சையாகும் என்பதால் மவுனமாகிவிடலாம்..









 

 

No comments:

Post a Comment