Wednesday, April 19, 2017

மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கிறேன்?

[gallery ids="12158,12159" type="rectangular"]


"மண்டை சிலுப்பி" மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்


கவிதைக்காக அவரை விமர்சித்தால், அவர் கவிஞன் என ஒப்புகொண்டதாகிவிடும் அது கவிதையும் அல்ல அவர் கவிஞரும் அல்ல, அது ஒரு வகை புலம்பல்


விஷயம் கவிதை அல்ல‌




2006களில் எப்படி எல்லாம் இந்த மண்டை சிலுப்பி தன் முடியினை சிலுப்பிகொண்டு திமுகவினை விமர்சித்தார் என்பது அப்பொழுது இவரை வாசித்தவர்களுக்கு தெரியும்


இன்றைய திராவிட மனுஷ் அல்ல அவர், அன்று அவரிடம் பார்ப்பண ஜால்ரா கையில் இருந்தது, அவர்களுக்கு இவர் தட்டிய ஜால்ரா கொஞ்சம் அல்ல‌


எப்படி எல்லாம் கிழித்தார், திமுகவினரின் நெஞ்சில் ரத்தம் வரும்படியெல்லாம் கிழித்தார் என்பது வரலாற்றில் காண கிடக்கின்றது


திமுக தனியார் கம்பெனி என்றும், கனிமொழி ஊழல்வாதி என்றும் கலைஞர் கையாலாகதவர், அறிவில்லா பேராசைக்காரர் என இவர் சொன்னதெல்லாம் சாதரண விஷயங்கள் அல்ல‌


பெரும் வன்மும், நுட்பமான சீண்டலும், ஒரு வகை வெறியுடன் கூடிய கோபம் அன்றி அம்மாதிரியான வசவுகள் சாத்தியமில்லை


அவை இப்பொழுது முக நூலிலும் வருகின்றன‌


அப்படி திமுகவினை விமர்சித்து பெரும் சமூக போராளியெனவும் அங்கிள் சைமனுக்கு சித்தப்பா முறை போலவும் வலம் வந்த இந்த மனுஷ்தான் இப்பொழுது திமுகவினை தாங்குகின்றாராம்


அப்படி ஸ்டாலினையும், கனிமொழியினையும், கலைஞரையும் கேள்வி கேட்டவர்தான் இன்று அவர்கள் முன் ஒரே வரிசையில் அமர்ந்து போஸ்கொடுக்கின்றாராம்


யாருக்கும் வெட்கமில்லை எனும் வரிகள் இதுதான், நமக்குமா இல்லை?


இவருக்கு வோகோவுடன் சென்றுவிட்டு நடுவழியில் ஓடிவந்த செஞ்சியார், கண்ணப்பன் கோஷ்டி எவ்வளவோ பரவாயில்லை


இந்த "மண்டை சிலுப்பி மனுஷ்" தான் இன்று திராவிடம் பேசி திமுக விவாதங்களில் பங்கெடுக்கின்றாராம், யாருக்க்கு கோபம் வராது?


இவர் திமுகவில் தொடரட்டும், தாங்கட்டும் ஆனால் அந்த பழைய காலங்களுக்கு மன்னிப்போ அல்லது அறியாமை என்றோ சொன்னாரா என்றால் இன்றுவரை இல்லை


இதனால்தான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் இவரை ஸ்டாலின் வைக்கவேண்டிய இடத்தில் வைப்பது நல்லது


பிறப்பாலும், தொண்டாலும், உழைப்பாலும் கோடிக்கணக்கான தியாக திமுகவினர் இருக்கும் இடத்தில் இம்மாதிரி திடீரென உள்நுழைத்து அழிச்சாட்டியம் செய்யும் நபர்கள் ஆபத்தானவர்கள்


ஒரு காலத்தில் திமுகவினை இப்படி எல்லாம் திட்டிய மனுஷே இன்று கட்சியின் முன்வரிசைக்கு வந்த பின், நாமும் சென்றுவிடலாமோ என அங்கிள் சைமன் கூட யோசிக்கலாம்...


நாம் திமுக அனுதாபியோ, கட்சியோ அல்ல, மாறாக சில இடங்களில் அதன் நியாயத்தை சொல்வதுண்டு


அப்படி பார்க்கும்பொழுது இம்மாதிரி மனிதர்கள் ஒரு ஸ்லிப்பீங் செல் போலவே தோன்றுவார்கள்


திமுகவிலும் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் உண்டு , இவரை போல பலர் உண்டு, அவரிடம் கட்சி எச்சரிக்கையாய் இருப்பது நல்லது


இவரை பற்றி அறிந்த எல்லோரும் அப்படித்தான் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்


கேட்க செவியிருந்தால் கேட்கட்டும்...



No comments:

Post a Comment