Friday, April 21, 2017

இன்று வடகொரியா, நாளை ஈரான்...

வடிவேலு - சிங்கமுத்து, சமரச பேச்சுவார்த்தை தோல்வி : செய்தி


இருவரும் சீனா மீது தாக்குதல் நடத்துவது குறித்தும், வட கொரியா யுத்தத்தை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றியும் நேற்றிரவு முழுக்க பேசிகொண்டிருந்தது குறிப்பிடதக்கது


இருவர் கையிலும் சுமார் 1000 அணுகுண்டுகளை வீசும் ஏவுகனைகளின் டிரக்கர் உள்ளதால் உலகம் மிக உன்னிப்பாக கவனித்து பதற்றத்தின் உச்சியில் உள்ளது










 

18057976_10208986274309188_4342605007063359983_n.jpg

வடகொரியா மீது அமெரிக்கா தாக்கும் நொடிகள் நெருங்குகின்றது, எல்லோரும் தயாராகின்றார்கள்

வடகொரியாவின் எல்லையில் சீனாவும், ரஷ்யாவும் படைகளை குவிக்கின்றன, யுத்ததில் ஈடுபட அல்ல, மாறாக அகதிகள் வந்துவிட கூடாது, வந்தால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக‌

நிச்சயம் அமெரிக்கா வடகொரியாவினை ஒப்பிடும்பொழுது பெரும் வல்லமை மிக்க நாடு சந்தேகமில்லை. ஆனால் அமெரிக்கா இதுவரை போர் நடத்தியிருக்கும் நாடுகள் எல்லாம் துப்பாக்கி தவிர ஏதும் காணாதவை


வியட்நாம், ஆப்கன் என அதன் களங்கள் இப்படியானவை, சதாமுடன் நடந்த போரில் மட்டும் ஸ்கட் ரக ஏவுகனைகளை எதிர்கொண்டது, அதனை மறிக்க பேட்ரியாட் ரக எதிர்ப்பு ஏவுகனைகளை சோதித்தது

அது வெற்றி என சொல்லமுடியாது, 50% வெற்றி என சொல்லலாம்

இப்பொழுது அமெரிக்காவிற்கு தேவை, ஏவுகனை பலமுள்ள ஒரு அனாதை நாடு, அடித்தால் கேட்க ஆளில்லா அனாதை நாடு வேண்டும், வடகொரியா சிக்கிவிட்டது

இந்த யுத்தத்தை நிச்சயம் வடகொரியாவின் ஏவுகனைகளை எப்படி தடுப்பது, நம் சிஸ்டம் முறையாக வேலை செய்கிறதா என சோதிப்பார்கள்

அரசியலில் ஏதும் வாதம் என்றால் கலைஞரிடம் தொடக்கத்திலே செய்யமுடியுமா? அப்படி செய்தால் சட்டையினை கிழித்து ஓடவைத்துவிட மாட்டார?

அதனால் வைகோ, சீமான், வேல்முருகன் போன்றோருடன் செய்துவிட்டுத்தான், பரிசித்து பார்த்துவிட்டுதான் பெரும் தலைகளுடன் விவாதிக்க முடியும்

அப்படி ரஷ்யாவிடமோ, சீனாவிடமோ இதற்காக மோத முடியாது , விஷயம் அமெரிகாவில் பாதியினை அழித்துவிடும், அதனால் சிக்கியது வெள்ளை தக்காளியின் வடகொரியா

இனி வடகொரிய ஏவுகனைகளுடன் பயிற்சி எடுப்பார்கள் , விஷயம் எல்லை மீறினால் மட்டுமே தரைபடை இறங்கும்

ஏன் இப்பொழுது வடகொரியாவிடம் சோதிக்க வேண்டும்? என்ன அவசரம்? கொஞ்சம் பணம் கொடுத்தால் வடகொரியா தமிழக சில்லறை கட்சிகளாக அடங்கிவிட போகின்றது அவ்வளவுதான், பின்னர் ஏன்?

இங்குதான் அவர்களின் நரிதிட்டம் இருக்கின்றது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குறி ஈரான், அதுதான் அது ஒன்றுதான், ஆனால் ஈரானிடம் ஏவுகனைகள் உண்டு, அது வடகொரியா கொடுத்தது என்பது சந்தேகமில்லை

அவர்களும் முந்தாநாள் ராணுவ அணிவகுப்பில் ஏவுகனை மீது "இது இஸ்ரேலின் மரணம்" என எழுதி வைத்து அணிவகுத்தது இன்னும் ஓவர்., ஆனால் அந்த ஏவுகனைகள் வட கொரியாவின் லோடொங் வகை பிரிவு, பிரிவு என்ன? அதே தான்..

ஆக ஈரானுக்கு வரம் கொடுத்த குருநாதரிடம் வித்தை காட்டிவிட்டு அந்த ஈரானிடம் வந்தால் அடிக்க எளிதாக இருக்கும்

இந்த ஒத்திகை யுத்தம் விரைவில் தொடங்கலாம், 1991ல் சதாமிடம் சோதித்த பேட்ரியாட் ஏவுகனைகளின் நவீன வெர்சன் , உண்மை களத்தில் சோதிக்கபடலாம்

அதன் பின் ஈரானுக்கு கண்டம் தொடங்கும்

சந்தேகமாக இருந்தால் அமெரிக்க ஐநா தூதரின் நேற்றைய பேச்சுக்களை பாருங்கள்

"வடகொரியா போலவே இன்னொரு மோசமான நாடு ஈரான், இந்நாடுகளை கட்டுபடுத்தும் வரை உலக அமைதி இல்லை"

இதன் அர்த்தம் என்ன?

இன்று வடகொரியா, நாளை ஈரான்...




 

No comments:

Post a Comment