Monday, April 17, 2017

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை


பதான் கோட் ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து , அதனை விசாரித்த குழு நமது உளவுதுறை தோல்வியால் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது, இதனால் பார்லிமெண்ட் கவலை அடைந்துள்ளது


இந்திய உளவுதுறை சறுக்குவது புதிதல்ல, கந்தகார் விமான கடத்தல், தாவூத் இப்ராகிமை தப்ப விட்டது, காஷ்மீரிய தாக்குதல்கள், கார்கில் ஆக்கிரமிப்பு, மும்பை தாக்குதல்கள் இவற்றில் எல்லாம் நம் உளவுதுறை பெரும் சறுக்கலை சந்தித்தது




உளவுதுறை விழிப்பாக இருந்தால் இவை தடுக்கபட்டிருக்கலாம்..


இந்திராவிற்கு பின்னால் ஈழத்திலும், வங்கத்திலும், இப்பொழுது நேபாளத்திலும் சறுக்கித்தான் கிடக்கின்றது


பாகிஸ்தானில் தொடர்ந்து இந்திய உளவாளிகள் என சந்தேகிக்கபடுவோர் தூக்கபடுகின்றனர், அதற்காக அவர்கள் இந்திய உளவாளிகள் என்றும் அர்த்தம் அல்ல‌


ஆனால் இந்தியாவில் ஒரு பாகிஸ்தான் உளவாளி கூட சமீபத்தில் சிக்கவில்லை, அதற்காக பாக் உளவாளிகள் இநதியால் இல்லை என்பது அர்த்தம் ஆகாது


இப்படியாக சமீபகாலமாக உளவுதுறை சறுக்குவது தெரிந்ததுதான்


எனக்கு தெரிந்து உளவுதுறை ஆட்களை தேர்வுசெய்வதில் சறுக்குகின்றதா? இல்லை பயிற்சி அளிப்பதில் சறுக்குகின்றதா என தெரியவில்லை


ஒரு மாதிரியான ஆட்களுக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் அது வீணாகத்தான் போகும், நோக்கம் நிறைவேறாது


உளவுதுறை ஏதோ நோக்கத்தில் இவர்களை இறக்க,இவர்களோ தாங்கள் பெரும் ஹீரோக்கள் என நினைத்து எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்


ஈழத்தில் உமா மகேஸ்வரன், பிரபாகரன் போன்றோர் அவ்வகை


இந்தியாவிடம் பலமுறை பிடிபட்ட பிரபாகரனை அன்றே எங்கோ தள்ளியிருந்தால் ஈழத்தில் இவ்வளவு அழிவு நடந்திருக்காது, அவரை வைத்து சாதிக்கலாம் என உளவுதுறை 1986ல் போட்ட தப்பு கணக்குத்தான் இந்த பேரழிவு..


தமிழகத்தில் அப்படி உளவுதுறை செய்த தவறான தேர்வு யார்?


அது உளவுதுறையால் களமிறக்கபட்டதாக சந்தேகபடும் சீமான் எனும் சைமன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று


பின் பார்லிமென்ட் குழு என்ன? எல்லோரும் உளவுதுறை குறித்து "கவலை" கொள்ள வேண்டியதுதான்..



No comments:

Post a Comment