Wednesday, April 19, 2017

மன்னார்குடி குடும்பம் கப்பலேற்றபடுமோ?




18010567_10208967227713035_6640598228013906340_n.jpg


கப்பலுக்கு சென்று "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்.." என பாடியதில் யாருக்கு ஞானம் வந்ததோ இல்லையோ அமைச்சர் ஜெயகுமாருக்கு வந்திருக்கின்றது


"கோடிமக்கள் சேர்ந்து வாழ
வேண்டும் விடுதலை
கோயில்போல நாடுவாழ
வேண்டும் விடுதலை"
"அச்சமின்றி ஆடிபாட
வேண்டும் விடுதலை,
தரணிவாழும் பூமிஎங்கும்
வேண்டும் விடுதலை"





என பாடியிருக்கின்றார், கரையேறியதும் பல்லவியினை தொடங்கிவிட்டார்

"ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்" பபபப்பபா பபப்பாய்ய்ய்ய் என பன்னீரிடம் சென்றுவிட்டார்

இவர் தனியாக பாடினாலும் பரவாயில்லை,
ஒரு அமைச்சர் குழுவே இவருடன் "லல்லாஆஆ லா..லல்லாஆஆஅ லாஆஆஆ" பாடிகொண்டிருக்கின்றது

"தோன்றும்பொழுது தாய் இல்லாமல் தோன்றவில்லையே
போகும் போது வேறுபாதை போகவில்லையே.." என அவர்கள் பாடிகொண்டெ இருக்கின்றார்கள்...

ஆக அவர்கள் தலைவனின் படத்து பாணியில், கப்பலில் "ஒரே கீதம் உரிமை கீதம்" பாடி, கட்சி மீட்க கிளம்பியிருக்கின்றார்கள்.

இப்பொழுது மணிமாறன் பன்னீர் செல்வம் தலமையில் இறுதியுத்தம் நடந்துகொண்டிருக்கின்றது, விரைவில் "வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி, நியாயத்திற்கு வெற்றி, தர்மத்திற்கு வெற்றி" என்ற ராமசந்திரன் படங்களின் ரிப்பீட்டட் டயலாக் கேட்கலாம்..

என்ன ஆளும் கட்சியோ, தூங்கி விழிப்பதற்குள் ஆயிரம் மாற்றங்கள, அண்ணா கட்சிதான், அதற்காக அவர் எழுதிய "ஓர் இரவு" எனும் கதைபோல ஒரு இரவுக்குள் இத்தனை மாற்றங்களா?

இனி என்ன செய்வார்கள்?

அக்காலத்தில் ஒரிசா பக்கம் நாட்டிற்கு ஆகாத குற்றவாளி கூட்டம் என்றொரு இனம் இருந்ததாம், மன்னன் அவர்களை கப்பலேற்றி எங்காவது தொலையுங்கள் என அனுப்பினானாம், அவர்கள் தான் இலங்கையில் குடியேறிய சிங்களவர்களாம்

அந்த பாணியில் மன்னார்குடி குடும்பம் கப்பலேற்றபடுமோ?

நடக்கும் விஷயங்களை கண்டால் அப்படித்தான் தோன்றுகின்றது, கப்பலேற்றுவார்களோ இல்லையோ கண்டெய்னரில் ஏற்றி மன்னார்குடிக்காவது அனுப்பிவிடுவார்கள் என்பது தெரிகின்றது







 

காலம் தந்த தலைவன் டிடிவி தினகரன் - நாஞ்சில் சம்பத்


அவர் காலம் தந்த தலைவன் என்றால், இவர் காலம் தந்த பீடை


காலம் கொடுத்த பீடைக‌ள் எல்லாம் இப்படி அறிக்கை விடாவிட்டால்தான் ஆச்சரியம்




சம்பத் மனதில் என்னவோ பாகுபலி "கட்டப்பா" போல ஒரு நினைப்பு...


ஏம்பா வைகோ, எப்படி பட்ட அரைவேக்காடுகளை எல்லாம் நம்பி தனி கட்சி தொடங்கினீர் என இப்பொழுது புரிகின்றதா?









No comments:

Post a Comment