Friday, April 28, 2017

விணுசக்கரவர்த்தி : நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..




Image may contain: 1 person


1980களின் மிக சிறந்த இயக்குநரும், கதாசிரியரும், அதன் பின் 2016 வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பில் ஜொலித்தவருமான விணுசக்கரவர்த்தி காலமாகிவிட்டார்


சட்டை இல்லா உடலில் சந்தணம் பூசிகொண்டு வரும் நாட்டாமை பாத்திரம் முதல், அட்டகாசமான மீசையோடு வந்த கமிஷணர் வேடம் வரை அவரை மறக்கமுடியாது


இன்னொருகோணத்தில் பார்த்தால் ரஜினிகாந்தோடு இணைந்து பயணித்த நடிகர், 1980களில் இருந்து அவரோடு நடித்தவர், ரஜினியின் சிவாஜி படத்திலும் அவர் இருந்தார், பின் தூக்கபட்டார்





ரஜினியின் பெரும் வெற்றிபடங்களில் இவரின் பங்களிப்பும் இருந்தது..

ரஜினி என்றல்ல ராமராஜன் முதல் எல்லா வசூல் சக்கரவர்த்திகளுடனும் நடித்து முத்திரை பதித்தவர்..

என்னதான் முகத்திற்கு மேக் அப் போட்டாலும், கண்களில் தெரிந்த அந்த கிராமத்து அப்பாவித்தனமும், பட்டதாரியாயினும் இறுதிவரை கிராமத்து மனிதராகவே பேசிவந்த அந்த குரலும் உண்மையானவை

நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..







No comments:

Post a Comment