Tuesday, April 25, 2017

நடிகை கஸ்தூரியின் பேட்டி...



Image may contain: 1 person


நடிகை கஸ்தூரியின் பேட்டியினை கேட்கவில்லை, ஆனால் அவர் இடஒதுக்கீடு குறித்து சில விஷயங்களை சொன்னதாக செய்திகள் சொல்கின்றன‌


இது தொடக்கமே, இன்னும் பற்பல குரல்கள் எழும்பலாம். இக்குரல்கள் 1930க்கு முன்பு உச்சத்தில் இருந்தன பின் தமிழகத்தில் பெரியாரால் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கின‌


பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் சுத்தமாக அடங்கின, வடக்கே விபிசிங் காலத்தில் பலமாறுதல்கள் வந்தன‌,


விபி சிங் காலம்தாம் சுதந்திர இந்தியாவில் ஓரளவு இடஒதுக்கீடுகளை சுதந்திரமாக விவாதித்த காலம், ஆனால் கொஞ்ச காலமே..


மற்றபடி காங்கிரஸ் மதவாதம் என்றால் சாடுமே அன்றி, இட ஒதுக்கீட்டிற்கெல்லாம் கண்டும் காணாமல் சென்றுவிடும், அதன் அமைப்பு அப்படி


பாஜக சொல்லவே வேண்டாம், இன்று அவர்களின் காலம், இப்பொழுது எல்லாம் மாறிகொண்டிருக்கும் நிலை, அந்த குரல்கள் தமிழகத்திலும் எதிரொலிக்கின்றன‌


கஸ்தூரி என்ன? இனி எல்லா பிராமண முகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறுத்தபடும்


ஏற்கனவே சலிப்படைந்திருக்கும் தமிழகம் அந்த குரலுக்கு செவிசாய்க்கும் எனும் ஆசை அவர்களுக்கு இருக்கலாம்


இவை எல்லாம் மிக நன்றாக திட்டமிட்டு செய்யபடும் பிரச்சாரங்கள், இது வெறும் தொடக்கமே, அதாவது மக்களின் நாடிபிடித்து பார்க்கபடும் வித்தை


இன்னும் நிறைய எதிர்பார்கலாம், எதிர்த்து கேட்க இங்கு யார் உருப்படியாக இருக்கின்றார்கள்?


பெரியார் எத்தனையோ தலைவர்களை உருவாக்கினார், ஆனால் அவர்கள் ஒருவர் கூட திறன்மிகு திராவிட தலைமுறையினை உருவாக்கவில்லை என்பது தெரிகின்றது


பெரியாரின் கொள்கை வாரிசுகள் என சொல்லபடுபவர்கள் யார்?, ஒரு பக்கம் வீரமணி, அன்னார் மூச்..


இன்னொரு பக்கம் கலைஞர், அவரோ ஓய்ந்துவிட்டார், அவருக்கு அடுத்து ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, இதில் யாராவது திராவிட கொள்கையினை தீரத்துடன் பேசுவார்களா? நெவர்


இன்னொரு பக்கம் அதிமுக, அதன் இன்றைய பன்னீரும், எடப்பாடியும் மோடியின் இரு கால்களுக்கு கீழே, மூச்சுவிடுவதே பெரும் விஷயம்


வை.கோ அது தறிகெட்ட புயல், இஷ்டத்திற்கு சுற்றும், தண்ணீர் தெளித்தாகிவிட்டது, மீறி பேசினால் அந்த கருப்புதுண்டை இழுத்து அவரை நிறுத்தும் வழி டெல்லிக்கு தெரியும்


ஆக பெரியாரின் கொள்கை வாரிசுகள் என யாரும் இல்லா நிலையில், கஸ்தூரி என்ன? இனி எல்லா பிராமண குரல்களும் அதிரடியாக வந்தே தீரும்


கஸ்தூரி பேசிவிட்டார் என்கின்றார்கள், பேச அழைத்தது யார்? இதுவரை இல்லாமல் புதிதாக அவரை ஏன் அழைத்தார்கள், ஏன் இதுகுறித்து பேச சொன்னார்கள் என்றெல்லாம் யாரும் கேட்டார்களா என்றால் இல்லை...


அறிவார்ந்த இனங்கள் அப்படித்தான், தாவீது மன்னன் ஆண்ட இஸ்ரேலை கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து யூதர்கள் அடையவில்லையா?


அப்படி 80 ஆண்டுகளுக்கு முன் தங்கள் அதிகாரத்தை இழக்க தொடங்கிய பிராமண சமூகம் மீண்டும் அந்த பொற்காலத்தை நோக்கி செல்ல துடிக்கின்றது.


ஆனால் ஒரு விஷயம் யோசிக்கலாம்


இலங்கையில் ஈழதமிழர்களின் கல்வியும், முன்னேற்றமும் அந்த நாட்டின் எல்லா துறைகளிலும் இருந்தன, நாடும் நன்றாக இருந்தது


இட ஒதுக்கீடு இன்னபிற கட்டுபாடுகளை கொண்டுவந்தபின்புதான் மோதல் தொடங்கிற்று, அது யுத்தமாயிற்று நாசமாயிற்று, இன்று அதல பாதாளத்தில் கிடக்கின்றது


அந்த இலங்கை அரசு செய்தது அநியாயம், தமிழின வெறுப்பு என சொல்லும் இந்த தமிழகத்து உணர்வாளர்கள்தான், இந்தியாவில் இட ஒதுக்கீடு வேண்டும், தமிழகத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என கொடிபிடிப்பார்கள்


அதாவது சிங்களன் செய்த தவறினை இந்தியா செய்தே ஆகவேண்டும் எனும் கொள்கை, அல்லது சிங்களன் செய்தால் தவறு, இந்தியா செய்தால் புரட்சி எனும் கொள்கை


சில நியாயங்கள் உலக யதார்த்ததிற்கு அப்பாற்பட்டவை..













 


 

No comments:

Post a Comment