Sunday, April 23, 2017

மகாராஷ்டிரா : விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு





மகாராஷ்டிரா வேளான் சந்தை ஹோட்டலில் அசத்தல் விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு


நிச்சயமாக விவசாயிகள் சுரண்டபடுவதன் தொடக்கம் இம்மாதிரி சந்தைகள்தான், அந்த பாவபட்ட விவசாயி தன் பொருளை இங்குதான் கொட்டவேண்டியிருக்கின்றது, இவர்கள் வைத்ததுதான் விலை


தமிழக விவசாயி இம்மாதிரி சந்தைகளில் ஏமாற்றபடும் விதம் கொஞ்சமல்ல, உழவர் சந்தை எல்லாம் சரிவராது, விவசாயி நிலத்தை கவனிப்பானா? அனுதினமும் சந்தையில் உட்காந்து வியாபாரம் செய்வானா?





கலைஞர் கொஞ்சம் சறுக்கிய திட்டம் அது..அவரை சொல்லியும் குற்றமில்லை இந்நாட்டு அரசு அமைப்பு வியாபாரிகளை தொடாது, அல்லது தொட முடியாது. அவர்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு அப்படி

சந்தைகள் தான் விவசாயிகளை சுரண்டுகின்றன, ஆனால் மகராஷ்டிர உணவக முதலாளிகளுக்கு இரக்கம் இருந்திருக்கின்றது, விவசாயிகள் பணத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கு திரும்பட்டும் என முடிவெடுத்திருக்கின்றார்கள்

இந்த சமூகத்தின் எல்லா தரப்பும், இந்த ஹோட்டல் முதலாளிகள் போல முடிவெடுத்துவிட்டால் இந்த நாட்டில் விவசாயி ஏன் அழபோகின்றான்? சாக போகின்றான்

சாககிடக்கும் விவசாயினை முதலில் காப்பாற்றலாம், விவசாயி வாழ விவசாயம் வாழும், விவசாயம் வாழ்ந்தால் பூமி வாழும்

உலக பூமி நாள் என பலவிஷயங்கள் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், முதல் விஷயம் இதுதான், பூமியினை காக்க முதல் வழி இதுதான்.

மகராஷ்டிர உணவு வியாபாரிகளுக்குள் விழித்த மனசாட்சி தமிழகம் உட்பட எல்லா வியாபாரிகள் மனதிலும் விழிக்கட்டும்,

நாம் ஒவ்வொருவரும் விவசாயியின் பொருளின்றி ஒரு நாள் கூட வாழமுடியாது, ஒவ்வொரு நொடியும் நமக்காக உழைப்பவன் அவன்




 




No comments:

Post a Comment