Monday, April 17, 2017

கோரக்பூர் ஐஐடி-யில் ‘வாஸ்து சாஸ்திரம்’ இனி கட்டாயம் : செய்தி

கோரக்பூர் ஐஐடி-யில் ‘வாஸ்து சாஸ்திரம்’ இனி கட்டாயம் : செய்தி


ஒவ்வொரு சாஸ்திரமாக கட்டாயமாக்கி கொண்டிருக்கின்றார்கள், வாத்சாயினர் எனும் முனிவர் சொன்ன சாஸ்திரத்தை என்று கட்டாயம் என ஆக்கி தொலைக்கபோகின்றார்களோ?


"அந்த" சாஸ்திரம் விரைவில் பாடம் ஆனால் என்ன ஆகும்? சும்மாவே தேசத்தின் மக்கள் தொகை 130 கோடி ஆகிவிட்டது




இன்று வாஸ்து நாளை வாத்ஸாயணம் என்ற நிலை வந்தாலும் வரலாம்..


இனிவரும் மாணவ சமுதாயம் கொடுத்துவைத்தது, வாத்ஸாயணரின் சாஸ்திரம் உட்பட‌ எல்லா சாஸ்திரத்தையும் படிக்க போகின்றது,


ஜாதகம் வரை இனி பள்ளியிலே படித்துவிடலாம், சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கலாம்,


யாருடைய ஜாதகம் தனக்கு சரிவருகின்றது என அவர்களே முடிவுசெய்துவிடலாம்


"அந்த" வாத்ஸ்யாணரின் சாஸ்திரமும் தெரிந்தால் கூடுதல் வசதி


இனி வரும் மாணவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள், வாஸ்து, யோகா,ஜாதகம் என எல்லா சாஸ்திரங்களையும் கல்வி நிலையங்களிலே படிப்பார்கள்


ஆகவே இந்நாள் வரை பட்டதாரிகளை உருவாக்கிய கழகங்கள், இனி சாஸ்திரம் கற்ற "சாஸ்திரிகளை" உருவாகக் போகின்றது


உலகாண்ட ரோமாபுரி, பிரிட்டணின் அரண்மனை, இப்பொழுதிருக்கும் வெள்ளை மாளிகை, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை எல்லாமும் வாஸ்து பார்த்து கட்டபட்டது என நம்பி தொலையுங்கள்....



No comments:

Post a Comment