Saturday, April 22, 2017

ஏராளமான பபூன்கள் என்பதுதான் சோகம்..

அது என்னமோ காமெடி என நினைத்து முதலில் கவனிக்கவில்லை, நிஜமாகவே அமைச்சர் தெர்மாக்கோலை அணையில் கொட்டியிருக்கின்றார்


இது பலவகையில் கண்டிக்கதக்கது


முதலில் குடிநீரில் இம்மாதிரி தெமாக்கோலை மிதக்கவிட்டதே பெரும் ஆபத்து, அது ஊறி அதிலுள்ள சில விஷயங்கள் நீரில் கலந்தால் அது நல்லதல்ல,


அணைநீரினை சுத்திகரிக்கும்பொழுது சில பொருளை சேர்க்கின்றார்கள், அது உடலுக்கு கேடு எனும் செய்திகள் வரும் நிலையில் இப்படியா தெர்மாக்கோலை கொட்டுவார்கள்?


அடுத்து சுற்றுபுற சீர்கேடு எனும் வகையிலும் இது நிச்சயம் வரும், பிளாஸ்டிக் பைகளை அணையில் கொட்டுவதே பெரும் ஆபத்து, சுற்றுபுற சீர்கேடு என சொல்லபடும் காலத்தில் ஒரு அமைச்சரே இப்படி கொட்டியிருப்பது என்ன வகை?


பலவகை குற்றசாட்டின் கீழ் இந்த அமைச்சரின் அட்டகாசம் வரும்


தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் பரவுகின்றது , ஆனால் அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி அந்த காய்ச்சலில் சிக்கியிருக்கின்றார்


வருமுன் காக்க வேண்டிய குடிநீர் பிரச்சினைக்கு காக்காமல், அப்பொழுது சசிகலா வாழ்க, சின்னம்மா வாழ்க, பன்னீர் வாழ்க, கூவத்தூர் வாழ்க, ஆர்.கே நகர் வாழ்க என சுற்றிவிட்டு, இப்பொழுது வந்து அணையின் நீர் மட்டத்தை, இப்படி மட்டரகமான ஐடியா மூலம் காக்கின்றாராம்


முன்பெல்லாம் குடிநீர் பிரச்சினை என்றால் அம்மா குடிநீர் பாட்டிலில் கொடுக்கின்றோம், இதனை விட என்ன கொடுக்க முடியும்? என கொந்தளித்தது இவர்கள்தான், எப்படி குடிநீர் பஞ்சம் போக்கினார்கள் பார்த்தீர்களா?


இப்பொழுது அலறி அடித்து குடிநீர் காக்க கிளம்பிவிட்டார்களாம்


இன்னும் என்னென்ன அழிச்சாட்டிய ஐடியாக்கள் எல்லாம் இருக்கின்றதோ தெரியவில்லை


கோடையினை சமாளிக்க இன்னும் என்னென்ன பைத்தியக்கார ஐடியாக்கள் எல்லாம் வருமோ தெரியவில்லை


அட அப்படியாவது கூவத்தூர் ஸ்டைலில் தமிழக மக்களை எல்லாம் சுவிட்சர்லாந்துக்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும்?


அதனை எல்லாம் செய்யமாட்டார்கள்


முன்பெல்லாம் கோடைவந்தால் இவர்கள் கவலை அம்மா எப்படி சமாளிப்பார்கள் என்பது? உடனே கொடநாடு களைகட்டும் இந்த அமைச்சர்கள் எல்லோரும் அந்த மலைசாதி பழங்குடியின மக்கள் ஆடுவது போல ஆடிக்கொண்டிருப்பார்கள்


இப்பொழுது அந்த கவலை இல்லை அல்லவா?


அதனால் புத்தி மக்களை காக்க வந்திருக்கின்றது, முன்பு எப்பொழுதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் மக்க்கள் நலன் என்பது என்ன என தெரியும்


தெரியாவிட்டால் இப்படித்தான்


ஏதோ ஒரு யுத்தத்தின் பொழுது தாஜ்மஹாலை கருப்பு துணிபோட்டு மூடியிருந்தார்களாம், அப்படி இனி தமிழக அணைகளை எல்லாம் மூடுவார்களோ என்னமோ?


ஜெயா இருந்திருந்தால் நிச்சயம் பிரமாண்ட ஜெயா படத்தோடு தார்ப்பாய் விரித்து மூடியிருப்பார்கள், அந்த அம்மாவும் ஹெலிகாப்டரில் இருந்து ரசிக்கும், இவர்கள் கும்பிடுவார்கள்


சசிகலா சிறைக்கு செல்லாவிட்டால் இதே காட்சி சசிகலா படத்தோடு நடந்துகொண்டிருக்கும், எப்படியோ அது தவிர்க்கபட்டது..


"இரண்டாம் மங்கம்மாள்" குஷ்பூ சொன்னது போல இது நிச்சயம் சர்க்கஸ் ஆட்சிதான், பல்டி அடிக்க ஏராளமானோர் உண்டு, பபூன்களும் உண்டு


ஆனால் ஏராளமான பபூன்கள் என்பதுதான் சோகம்..


இனி பரமார்த்த குரு கதையில் வரும் சீடர்கள் போல , இவர்கள் சூரியனை ஒரு மாதம் தார்பாலின் போட்டு மூடினால் என்ன? என யோசிக்கும் முன்னால் தமிழகம் காப்பாற்றபட்டுவிட்டால் நல்லது...


இந்த "புது விஞ்ஞானி" அமைச்சர்களை வைத்துகொண்டு பெரும் விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு எப்படி அஞ்சலி செலுத்துவது என யோசித்துதான் ஜெயலலிதா அப்துல் கலாமின் இறுதி அஞ்சயினை தவிர்த்திருக்கலாம்..


அவர் அப்துல் கலாம் அடக்க நிகழ்விற்கு செல்லாமல் இருந்ததற்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது.,


சே.. நாம்தான் தவறாக இனைத்துவிட்டோம்..

No comments:

Post a Comment