Friday, April 28, 2017

கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி







Image may contain: 2 people, people smiling, people sitting, dog and indoor


இன்று தொழில்நுட்பம் பெரிதாக‌ வளர்ந்திருக்கின்றது, கேமரா முதல் கிராபிக்ஸ் வரையில் வித்தை காட்ட முடிகின்றது , எந்த புத்தகம் ஆனாலும், எந்த விஷயமானாலும் கணிபொறியின் முன் அமர்ந்துவிடுகின்றது


சினிமாவினை தொழில்நுட்பத்திலே முடித்துவிடலாம்..


ஆனால் அன்று அப்படி அல்ல, புத்தகங்கள் குறைவு, தொழில்நுட்பமும் இல்லை, காட்சி அமைப்பும் பிரமாதம் இல்லை, படம் என்பது வசனங்களிலே உணர்ச்சி ஊட்டபடவேண்டும் எனும் நிலை





எல்லா வித்தைகளையும் "வசனதமிழ்" என்றொரு ஒரு விஷயத்தில் அடக்கி அப்படங்களை வெற்றிபடங்களாக்கிய கலைஞரின் நினைவு இந்த பாகுபலி காலத்திலும் வரத்தான் செய்கின்றது

இன்று ராஜமவுலி, தொழில்நுட்பம், கிராபிக்ஸ் என எல்லோரும் சேர்ந்து செய்யும் வேலையினை அன்று கலைஞர் தமிழ் மூலம் தனியாக செய்திருக்கின்றார்..

அப்படி அன்றே மந்திரகுமாரி, மனோகரா, காஞ்சிதலைவன் என அக்கால சரித்திர படங்களை தன் வசனத்தின் மூலமே தாங்கி பிடித்த கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி

இதுதான் கலைஞர் காலத்தை வென்று நிற்பதன் முத்திரை..







தமிழிசையின் இன்றைய காமெடியினை காணவில்லை, அதனை போல பன்னீர்செல்வத்தின் இன்றைய பேட்டியும் மிஸ்ஸிங்

இந்த கோஷ்டிகள் எல்லாம் பாகுபலி பார்க்க சென்றிருக்கலாம், இனி பார்த்துவந்துவிட்டு மோடியினை பாகுபலி வடிவில் பார்க்கின்றோம்,


பன்னீர் செல்வத்தை கட்டப்பா வடிவில் பார்க்கின்றோம், தமிழிசையினை சிவகாமி தேவி வடிவில் பார்க்கின்றோம் என சொல்லாமல் இருந்தால் நல்லது








 


 

No comments:

Post a Comment