Friday, April 21, 2017

"ஆசிரியர்" வீரமணியினை விமர்சித்தால் ...

"ஆசிரியர்" வீரமணியினை விமர்சித்தால் தொலைப்போம் எனவும் சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்


கி.வீரமணி உண்மையிலே பெரியார் வழி தூய‌ போராளி என சிலர் இன்னும் நம்பிகொண்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது, பரிதாபத்திற்குரியவர்கள்


பார்பண ஜெயலலிதாவினை, நான் பாப்பாத்தி என ஆணவத்தோடு முழங்கிய ஜெயாவிற்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என சொன்னபொழுதே வீரமணியின் வேட்டி கிழிந்தது...




இப்பொழுது எம்மிடம் வந்து ஏய் எம் ஆசிரியரை பற்றி என்ன சொன்னாய் என சீறுகின்றார்கள்?


மூண்று அதிகார வர்க்க பார்ப்பனர்களை கடந்து இன்றைக்கு 69%இட ஒதுக்கீட்டை பெற்று தந்த தலைவர் ஆசிரியர் வீரமணி தெரியுமா என பொங்குகின்றார்கள்


யார் மூன்று பார்ப்பணர்? காமராஜரும், கலைஞருமா?


வெயில் அதிகமான காலம்தான், அதற்காக வீரமணி இடஒதுக்கீட்டின் தந்தை எனும் அளவிற்கா உளறுவார்கள்?


அந்த ஆசிரியர் எப்படி எல்லாம் ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பார் என தெரிந்தபின்ன்னுமா?, சசிகலாவினை முதல்வராக ஆக்கும் அளவிற்கு ஆதரித்ததை தெரிந்த பின்னுமா பேசுகின்றார்கள் என புரியவில்லை


பெரியாரின் நூல்களை அரசுடைமயாக்க தடுப்பது யார் என்று உலகிற்கு தெரியாதா? அப்படி ஆக்கினால் யாருக்கு நஷ்டம்


காலையிலே கி.வீரமணி மகா உத்தமன் என கிளம்புகின்றார்கள், பெரியார் சொன்ன கருப்பு சட்டை அணிவது மட்டுமா பெரியார் தொண்டருக்கான தகுதி??


வீரமணிக்கே கிளம்புகின்றார்கள் என்றால்..


தீபாவும் தீபா கணவனும் முதல்வர் கனவில் மிதப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது???


ஒருவேளை எட்டாம் அதிசயமாக தீபா முதல்வரானாலும் , பட்டத்தோடு பல்லாக்கு தூக்க இவர் ரெடி..



No comments:

Post a Comment