Tuesday, April 18, 2017

தமிழக மர்மம் ஒரு காலமும் புரியாது...

தமிழகத்தின் கடன் தலைக்கு மேல் 10 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது, விவசாயம் வீழ்ந்து கிடக்கின்றது, விவசாயி செத்துகொண்டிருக்கின்றான்


கடும் வறட்சியால் மக்கள் படும் பாடு கொஞ்சமல்ல, ஒரு குடம் நீர் சில நூறு ரூபாய்களை தொட்டுவிட்டது என்கின்றார்கள், வாழ்வு பெரிதும் பாதிக்கபட்டிருக்கும் நிலை


டாஸ்மாக் கொடுமைக்கு எதிரான போராட்டம், குடிநீருக்கான போராட்டம் என தமிழகம் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது




எல்லா தரப்பு மக்களும் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் மாநிலத்தில், வாழவே முடியாது எனும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் மாநிலத்தின் அரசும், அமைச்சரவையும் என்ன செய்கின்றது?


அரசு தன் மக்களுக்கு உழைக்காமல் கட்சியின் தலமைகளுக்கு முட்டுகொடுத்து தாங்குகின்றது, அமைச்சர்கள் பலர் லஞ்ச ஊழல், வரி ஏய்ப்பு வழக்குகளில் சிக்கி இருக்கின்றனர்


இன்னும் சில அமைச்சர்கள் கட்சி சின்னத்தை மீட்பது எப்படி என கடும் ஆலோசனையாம்


தொகுதி பக்கம் இருக்கவேண்டிய சமஉக்கள் கப்பலில் சுற்றிகொண்டிருக்கின்றார்களாம்


இப்படி ஒரு கட்சி, இப்படி ஒரு ஆட்சி என்றாவது கேள்விபட்டதுண்டா?


ரோம் எரியும் பொழுது நீரோ என்ன செய்தானோ அதனைத்தான் இந்த அரசும் செய்கின்றது


நினைவிருக்கின்றதா?


முன்பு எங்கோ எவனையோ காப்பாற்ற நடந்த போரில் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்பார்கள்,


ஒரு நாள் குடிநீர் குழாய் பழுதடைந்தாலும் கலைஞர் அரசு ராஜினாமா என்பார்கள், மின் பழுது என்றாலும் கலைஞர் ராஜினாமா


ஏன் சோற்றில் உப்பு கூடிவிட்டாலும் நடு தெருவிற்கு வந்து கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என ஒப்பாரி வைப்பார்கள்


இதோ ராஜினாமா மட்டும் அல்ல, வாழ்நாள் தடை விதிக்கவேண்டிய அரசு ஒன்று இருக்கின்றது


ஒரு சத்தம், ஒரு முணுமுணுப்பு, ஒரு ராஜினாமா குரல் எங்காவது கேட்குமா? கேட்டிருக்காது


இதுதான் தமிழக அரசியல்


கலைஞர் ஆட்சி நல்லாட்சி என்றால் கூட வானுக்கு குதிப்பதும், மற்றவர்கள் நீரோ ஆட்சி அல்லது சீரோ ஆட்சி கொடுத்தாலும் நெருப்பு கோழி மண்ணில் தலையினை புகுத்திகொள்வது போல இருப்பதும் தமிழக யதார்த்தம்


இந்த அரசு இன்னும் நீடிக்கவேண்டுமா என்ற குரல் எங்காவது வருகின்றதா? ஏன் வரவில்லை?


இரட்டை இலைக்கு டெல்லிக்கே பேரம் பேசியவர்கள், இங்கு பேசியிருக்கமாட்டார்களா?


பாகுபலி மர்மம் கூட இன்னும் 10 நாளில் தெரிந்துவிடும் , தமிழக மர்மம் ஒரு காலமும் புரியாது...



No comments:

Post a Comment