Monday, April 17, 2017

கலைஞர் ஹேமாவதி அணை கட்டும்பொழுது ஏன் தாவி குதித்து தடுக்கவில்லை?

கலைஞர் ஹேமாவதி அணை கட்டும்பொழுது ஏன் தாவி குதித்து தடுக்கவில்லை, அவர் துரோகி, அவர் தமிழின கொலையாளி, காவேரி கொன்றான் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்


காவேரி தனி ஆறு அல்ல‌


கன்னடத்தில் ஹேமாவதி, கபினி என சில துணையாறுகள் உண்டு, தமிழகத்தில் பவானி, நொய்யல் என சில உண்டு




அதாவது பவானியும் நொய்யலும் இணைந்த காவேரியே தஞ்சைக்கு வரும், இதில் பவானியிலும், நொய்யலிலும் அணை கட்டியது தமிழகம், அதவாது தஞ்சைக்கு வரும் தண்ணீரில் கொஞ்சம் தமிழகத்திலே முடக்கபட்டது


காவேரி பிரச்சினை வரும்பொழுது இந்த ஆறுகளால் கிடைக்கும் நீரினை மறைத்து தஞ்சையின் மொத்த நீர்தேவையும் கன்னடத்தில் இருந்து கிடைப்பது போல கொஞ்சம் புத்தியான நடவடிக்கையில் தமிழகம் இறங்கியது, இந்த மதிநுட்பமான திட்டம் கலைஞரால் தொடங்கபட்டது


கன்னடம் இதில் முதலில் ஏமாந்தது, மொத்த தஞ்சை தேவையும் தமிழகம் கேட்ட டி எம் சியில் அடங்கியது என அது நம்பியது.


கொஞ்சம் சுதாரித்த கன்னடம் அதன் பின் உண்மையினை உணர்ந்து, தன் துணையாறுகளில் ஹேமாவதி, கபினியில் அணை கட்டியது


அதவாது தமிழகம் பவானியில் , நொய்யலில் அணைகட்டினால் சரி, ஆனால் கன்னடம் ஹேமாவதியில் அணைகட்டினால் கலைஞர் ஓடி சென்று குதிக்க வேண்டும்?


எப்படி நியாயம் பார்த்தீர்களா?


ஆனால் ஒரு சிக்கலும் இல்லாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை மலையாள பாசத்தில் குறைத்த எம்ஜி ராமசந்திரனை ஒன்றும் சொல்லமாட்டார்கள், அவர் வள்ளல், பொன் மன செம்மல் இன்ன பிற‌


அந்த கலைஞரை அர்த்தமே இல்லாமல் சாடுவது இப்படி அரைகுறையாக புரிந்ததான், எவனாவது கொளுத்திபோடுவான் அப்படியே நம்பிகொள்வது


நாளையே கலைஞர் இருப்பதால் மழை வரவில்லை என எவனாவது சொல்லட்டும், ஆம் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்தால்தான் மழை செழிக்கும் என கிளம்புவார்கள்


இவர்கள் இப்படித்தான்..



No comments:

Post a Comment