Tuesday, April 25, 2017

கலைஞர் கரையேறிவிட்டார், ஸ்டாலின் நீந்திகொண்டிருக்கின்றார்




Image may contain: 1 person, outdoor and water


கலைஞர் அடிக்கடி அந்த சம்பவத்தை சொல்வார், அதாவது அவரும் அவர் நண்பர் தென்னனும் அந்த திருவாரூர் கோயில் குளத்தில் குளிக்க சென்றார்களாம், நடுவில் இருக்கும் மண்டபத்தை தொட நீந்தினார்களாம்


பாதியில் திணறிய தென்னன், திரும்பி விடுவோம் என்றாராம், கலைஞரோ நாம் திரும்பினாலும் பாதி தூரம் நீந்தவேண்டும், அதற்கு பதிலாக மண்டபம் நோக்கி நீந்தினால் அதனை அடைந்துவிடலாம் என சொல்லி , அயராது நீந்தி மண்டபத்தை அடைந்தாராம்


தான் சோர்வுற்ற நேரமெல்லாம் இச்சம்பவத்தை சொல்லி, இன்னும் நான் எதிர்நீச்சல் போடவேண்டிய தொலைவு உண்டு என அடிக்கடி சொல்வார் ,





கலைஞரும் அந்த குளமும் பிரிக்க முடியாதவை, சிறுவயதில் கலைஞர் கல்வியில் தோற்று அழுததாகட்டும், கையெழுத்து பத்திரிகைக்கு எழுதியதாகட்டும், தாங்கொணா புறக்கணிப்பில் கலங்கியதாகட்டும், எல்லாம் அந்த கரையிலேதான்....

நான் யாரென உலகிற்கு காட்டுகின்றேன் என அவர் கிளம்பியதும் இக்குளத்துகரையில் இருந்துதான்..

அந்த குளத்தருகே அமர்ந்திருக்கின்றார் ஸ்டாலின், தந்தையின் அந்த உத்வேக வார்த்தைகள் மனதில் ஒலிக்கலாம்,

கலைஞர் கரையேறிவிட்டார், ஸ்டாலின் நீந்திகொண்டிருக்கின்றார்

சும்மா டுவிட்டரில் சொல்லவில்லை ஸ்டாலின்.,

ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் படம் இது,
கலைஞரை புரிந்தோருக்கு புரியும்













 


 

No comments:

Post a Comment