Friday, April 21, 2017

இது திவாகரன் மகன் ஜெயந்தன் என்பவரின் முகநூல் பதிவு ...



இது திவாகரன் மகன் ஜெயந்தன் என்பவரின் முகநூல் பதிவு என்கின்றார்கள், அவரும் மறுக்கவில்லை


அதாவது ஜெயா மருத்துவமனை உடையில் இருப்பதை எதிரிகள் பார்க்க கூடாது என அவர்கள் முன்பு படங்கள், வீடியோ வெளியிடவில்லையாம்


இனி வெளியிடபோவது போல் இவர் சொல்கின்றார்





முன்பு வோட்டுக்காக தொப்பியும், பல்செட்டும் இல்லாத எம்ஜிஆர் வீடியோவினை அமெரிக்காவில் இருந்து வெளியிட்ட கட்சி அது, அப்போது எல்லா எதிரிகளும் பார்த்தனர்

பின் ஜெயா விபத்தில் சிக்கியும், சட்டமன்றத்தில் தலைவிரி கோலமாக கிழிந்த சேலையுடன் இருந்ததையும் எல்லோரும் கண்டனர்

அப்பொழுதெல்லாம் நிறைய எதிரிகள் இருந்ததாக ஜெயா சொல்லியிருக்கின்றார்..

ஆனால் பின்னர் "கண்ணுக்கெட்டிய" தூரம் வரையில் எதிரிகளே இல்லை என ஜெயா சொன்னபின்னும் அவருக்கு எதிரிகள் யார் என்பது இவர்களுக்கே வெளிச்சம்

மத்திய அமைச்சர்களும், ஆளுநரும், ராகுல் காந்தியும், ஆளும் கட்சியினர் யாரும் ஜெயாவினை அப்பல்லோவில் பார்க்கவே இல்லை ஒருவேளை அவர்கள்தான் அந்த "எதிரிகளோ"?

விரைவில் அப்பல்லோ வீடியோ வரலாமாம், அப்படி வந்தால்....

"ரத்ததின் ரத்தங்களே சசிகலாதன் என் வாரிசு, கட்சிக்கும் சொத்துக்கும் வாரிசு, அவருக்கு வாரிசு தினகரன்" என சொல்லாத வரைக்கும் நல்லது..











Image may contain: text




No comments:

Post a Comment