Wednesday, April 19, 2017

மங்கள்யான், சந்திராயனுக்கு எல்லாம் இந்த ஆரியபட்டாதான் முன்னோடி




17990981_10208967367156521_294009317189613255_n.jpg


சுதந்திரம் பெற்றபொழுது பின் தங்கிய இந்தியா, வெள்ளையன் சுரண்டிபோட்ட பாண்டமாக கிடந்தது, போதாதற்கு பிரிவினை வேறு ரத்தம் தெளித்து குற்றுயிராக‌ கிடத்தியிருந்தது


பெரும் தொழிலோ, விஞ்ஞானமோ அதனிடம் இல்லை.


யுத்தங்களை எதிர்கொள்ளும் வசதியோ, தொழில்நுட்பமோ இல்லை, சோவியத் யூனியன் ஓரளவு கருணை காட்டினாலும் இந்தியாவிற்கு அது சாதமாக இல்லை





1959களில் இருந்தே யுத்தம் விண்வெளிக்கு மாறியிருந்தது, விண்வெளி அறிவின்றி இனி ஏதும் சாத்தியமில்லை என உலகம் வேகமாக பறக்க எத்தணித்தது

இந்தியாவும் அதில் கலந்தது, அது இந்திரா காந்தி காலத்தில் கடும் ஆர்வம் எடுத்தது

சதீஷ் தவான், அப்துல்கலாம் போன்ற தியாகி விஞ்ஞானிகள் அந்த உழைப்பிற்கு அடிக்கல் இட்டார்கள்

முதல் இந்திய செயற்கைகோளான ஆரியபட்டா இந்த நாளில்தான் 1975ல் விண்வெளியில் ஏவபட்டது, இந்திய வானியல் சாஸ்திர வித்தகர் ஆரியபட்டரின் பெயர் சூட்டபட்டது

நம்மிடம் ஏவும் வசதி கூட‌ இல்லை, ரஷ்யா தான் ஏவிகொடுத்தது, 5 நாட்கள் இயங்கிய ஆரியபட்டர் பின் முடங்கியது

தோல்விதான், ஆனால் குழந்தை தானே விழுந்து விழுந்து நடக்க பழகுவது போல் இந்தியா விண்வெளியில் நடக்க தொடங்கியது

இப்படி பல தோல்விகளை இந்தியா பெற்றுத்தான் இன்று 103 செயற்கைகோள்களை சொந்தமாக ஏவும் வல்லமையினை 40 ஆண்டுகளுக்குள் பெற்றிருக்கின்றது

மங்கள்யான், சந்திராயனுக்கு எல்லாம் இந்த ஆரியபட்டாதான் முன்னோடி

இந்தியா தன் செயற்கைகோளை அனுப்பி வானில் காலடி எடுத்துவைத்த நாள் இது..

இன்று உலகின் விண்வெளிபலத்தின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இது சாதாரண விஷயம் அல்ல, நிச்சயம் சாதனை

ஒவ்வொரு இந்தியனும் இதனை நினைத்து பெருமை கொள்ளலாம், எத்தனை இடையூறுகளை தாண்டி இத்தேசம் விண்வெளியில் வெற்றிநடை போடுகின்றது

வந்தே மாதரம்..




 

No comments:

Post a Comment