Saturday, April 15, 2017

"அதே கண்கள்" என்றொரு படம் வந்திருக்கின்றது ...

17904244_10208934887464549_6346786724153272583_n.jpg


ஷிவாடா நாயர்


"அதே கண்கள்" என்றொரு படம் வந்திருக்கின்றது


குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம், திருப்பு முனை படம் என்றெல்லாம் சொல்லமுடியாது, ஆனால் அந்த நடிகை பின்னி எடுத்திருக்கின்றார், சும்மா சொல்ல கூடாது


இது நிச்சயம் முழுக்க முழுக்க அந்த நடிகை ஆக்கிரமித்திருக்கும் படம், நாயகி தன் பாத்திரத்தை மிக அட்டகாசமாக சுமந்திருக்கின்றார்..


எப்பொழுதாவது கிடைக்கும் அபூர்வ நடிகை அவர், தன்னை மிக அழகாக நிரூபித்திருக்கின்றார், இன்றைய தேதியில் இப்படி ஒரு நடிப்பு எந்த நடிகையிடமும் சாத்தியமில்லை..


இந்த நடிகைக்கு நடிப்பு தீனி போட பெரும் ஜாம்பவான் இயக்குநர்களே திணறவேண்டும், இந்த இயக்குநரை மிக எளிதாக தள்ளிவிட்டிருக்கின்றார் நடிகை..


மிக கனமான பாத்திரத்தை அசால்ட்டாக கடந்து சென்றிருக்கின்றார், அந்த பெண்ணின் நடிப்பிற்கு கைதட்டத்தான் வேண்டி இருக்கின்றது


ஏதோ "ஷிவாடா நாயர்" என பெயராம்


ஒரு மோசடியான, நம்பிக்கை துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் கலக்கி எடுத்திருக்கின்றார், நிச்சயமாக சொல்லலாம் "கொடி" எனும் சமீபத்திய படத்தில் திரிஷா எனும் மெழுகு பொம்மைக்கு பதிலாக இந்த பெண்ணை வைத்திருந்தால் படம் ஒரு வருடம் ஓடியிருக்கும்


மிகபெரும் நடிகையாக அந்த பெண் வர வாய்ப்பிருக்கின்றது


அந்த படத்தில் ஒரு பாடல் வருகின்றது, அந்த மோசடி பெண் வரும்பொழுது பின்னணியில் ஓடுகின்றது, பாடல் எழுதியவர் 1987ல் எம்ஜிஆரை சாந்தபடுத்த எழுதினாரா? இல்லை இப்பொழுது பன்னீருக்காக எழுதினாரா என தெரியவில்லை, காரணம் வரிகள் அப்படி


"அடியே நீ களவானி, குட்டி காட்டேரி
அலுக்காமல் விளையாடும் கில்லாடி நீ"


வரிகள் காதில் ஒலிக்கும்பொழுதே நம் மனம் பெங்களூர் சிறைக்கு சென்று சுற்றுகின்றது, அடுத்தவரி அப்படியே சிரிக்க வைக்கின்றது


"சிறுவண்டு கண்ணுக்குள் ஒருவண்டி பொய்யாநீ


அழகான மேக்கப்பில் அனகோண்டா நீ"


அட கூவத்தூர் கொடுமையும், கொண்டையும் நினைவுக்கு வந்தது, வரிகள் தொடர்ந்தது


"அழகான சதிகாரி அடங்காபிடாரி
பாபிடால் கெட்டப்பில் பச்சோந்தி நீ


பசுதோலில் புலிதான் நீ, கிளிவேட பருந்தா நீ
நரிவேஷம் எல்லாமே வெளுத்து போச்சே..


தந்திரா..தந்திரா..தந்திரா"


இப்படியாக அந்த பாடல் முழுக்க முழுக்க அவரை நினைத்தே எழுதபட்டிருக்கின்றது, கழக உடன்பிறப்பிக்கள் இந்த பாடலை ஏன் இவ்வளவு நாளும் கொண்டாடாமல் அமைதி காத்தார்களோ?


எப்படியோ, ஜெயா கதையினை படமாக எடுத்தால், அவர் தோழி வேடத்திற்கு அருமையான நடிகை ரெடி


இந்த வருடத்திற்கான குஷ்பூ விருது நிச்சயம் அந்த ஷிவ்தா நாயருக்குத்தான் அப்படி ஒரு நடிப்பு


இந்த வருட கலைஞர் விருது அந்த பாடல் எழுதியவருக்கு வழங்க வேண்டும்...இந்த வரிகளுக்காக‌


"அடியே நீ சதிகாரி, குட்டி காட்டேரி
அலுக்காமல் விளையாடும் கில்லாடி நீ"


சினிமா ஆட்சி நடத்தும் அதிமுக பொதுவாக பாடல்களில் கவனமாக இருக்கும், ராமசந்திரனின் ஆட்சியில் "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே" பாடலை எழுதிவிட்டு கங்கை அமரன் பட்ட பாடு கொஞ்சமல்ல‌


அமரனை ஓட விரட்டினார் ராமசந்திரன், அதாவது தன் ஆட்சியினை குறித்து பாட்டெழுதியதாக நினைத்தார், ஆட்சி அப்படி என்ற அச்சம் அவருக்கே இருந்திருக்கின்றது


சினிமாவினை மிரட்டி வைத்தவர்களில் ஜெயாவும் அப்படி


ஆக‌ எமது சந்தேகம் எல்லாம் தினகரன் + பழனிச்சாமி ஆட்சியில் இப்படி ஒரு பாடல் எப்படி வெளிவந்தது?


ஏதும் உள்குத்து ஏதும் இருக்குமோ?


இந்த பாடலை கன்னட வானொலியில் ஒலிபரப்பினால் எப்படி இருக்கும்?, மெரீனா பக்கமும் பாடலாம்..


"அழகான சதிகாரி அடங்காபிடாரி
பாபிடால் கெட்டப்பில் பச்சோந்தி நீ


பசுதோலில் புலிதான் நீ, கிளிவேட பருந்தா நீ
நரிவேஷம் எல்லாமே வெளுத்து போச்சே..


தந்திரா..தந்திரா..தந்திரா"

No comments:

Post a Comment