Monday, April 24, 2017

நயனின் டோரா படம் டேராவுக்குள் ......





நயனின் டோரா படம் டேராவுக்குள் அடங்கியதில் விநியோகிஸ்தர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றார்களாம், இதனால் அடுத்த படமான "அறம்" படத்தினை வாங்க ஆளில்லையாம்


ரஜினி என்றால் சர்ச்சை செய்யலாம், வேறு முண்ணணி நடிகர்கள் என்றால் அடுத்தபடத்திலாவது அள்ளலாம், நயனுக்கு அப்படி என்ன ரசிகர் கூட்டம் ( Babu Rao
எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை போல) இருக்கின்றது?, ஆக அடுத்தபடம் எப்படியும் போகட்டும், இனி நயன் படத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்களாக பேசிகொண்டிருந்தார்களாம்





இந்த நேரத்தில் டி.ஆரும் பேசிவிட்டார் என்கின்றார்கள், "நயன்தாரான்னா என்ன பெரியா இதுவா? ஏன் அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து விழுந்தடிச்சு வாங்குனீங்க? இப்ப ஐயோ அம்மான்னு புலம்புறீங்க?" என சிரித்துகொண்டு சொன்னதாக செய்திகள் கசிகின்றன‌

அது டி.ஆரா? இல்லை சிம்பு கொஞ்சம் தாடிவளர்த்துவிட்டு சொல்லிவிட்டு வந்தாரா? என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது

நயனுக்கு நிகழ்ந்துவிட்ட இந்த மாபெரும் அவமானத்தை, நண்பர்கள் Babu Rao , Chandran Kannan எப்படி எடுத்துகொள்ள போகின்றார்களோ தெரியவில்லை..

இந்த இடியினை தாங்கும் இதயத்தை இறைவன் அவர்களுக்கு அருளட்டும்

எதற்கும் விநியோகிஸ்தர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

(மிஸ்டர் Babu Rao , நாளை நடக்கும் பொது வேலைநிறுத்தத்தில் உங்களின் வேலை நிறுத்தம் விநியோகிஸ்தர்களை கண்டித்துதானே இருக்கும்? )




 




No comments:

Post a Comment