Friday, April 14, 2017

ஒரு பெரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாரவது தெரிகின்றது...


17884083_10208921901499908_5311390207066261673_n.jpg


ஏதோ ஒரு பெரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாரவது தெரிகின்றது, கிட்டதட்ட ஒரு பெரும்போருக்கான ஒத்திகையில் அது இறங்கியிருக்கின்றது


மிக துல்லியமான டொமாஹாக் ஏவுகனைகளை சிரியாவில் அது ஏவியபொழுதே அது தெரிந்தது, அந்த கனைகள் பெரும் பலம்வாய்ந்தவை, சும்மா சிரியா மீதெல்லாம் ஏவ அவசியமில்லை


நேற்று ஆப்கனில் மிகபெரும் குண்டினை சோதித்திருக்கின்றார்கள், அது தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை, அவர்களுக்கு ஒரு தொலைதூர பாலைவன தேசம் ஆயுதம் சோதிக்க‌ வேண்டும், அதனால் அதனை அடிக்க காரணம் வேண்டும், காரணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை உருவாக்கி கொள்வார்கள்




அணுகுண்டு அல்லாத குண்டுகளில் மிகபெரியது யாருடையது என ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த 5 வருடமாக மவுன யுத்தம் நடக்கின்றது


கடந்த வருடம் ரஷ்யாவும் இம்மாதிரி ஒரு குண்டினை சோதித்தது, "வெடிகுண்டுகளின் தாய்" என அதற்கு பெயரிட்டார்கள், அது கொஞ்சம் கொடூரமான தாய், ஆம் சுற்றியிருக்கும் ஆக்ஸிஜனையும் உறிஞ்சிவிட்டு எல்லோரையும் கொல்லும்


அவ்வகையில் அமெரிக்கா நேற்று சோதித்திருக்கும் "இன்னொரு தாய்" கொஞ்சம் இரக்கமுள்ளவள்


ஏன் இப்படி ஏவுகனைகளையும், வெடிகுண்டுகளையும் கடுமையாக சோதிக்க்கின்றார்கள்? ரஷ்யாவுடன் மோதவா?


அந்த தவறை அமெரிக்கா அவ்வளவு எளிதில் செய்யாது, தன் சமபலம் உள்ள தேசத்துடன் அது மோதவே செய்யாது, பதுங்கும்


இப்பொழுது அதன் குறி வடகொரியாவாக இருக்கலாம்,


அங்கு குவிக்கபடும் கப்பல்களும், அங்கு திருப்பட்டு இருக்கும் செயற்கை கோள்களும், இன்னும் பல விஷயங்களும் விரைவில் அங்கு கச்சேரி இருக்கும் என்பதை காட்டுகின்றன‌


வடகொரியாவும் விடுவதாக இல்லை, அதுவும் ஏவுகனை அணுகுண்டு என சோதித்துகொண்டு அமெரிக்காவிற்கு சவால் விட்டுகொண்டே இருக்கின்றது


வடகொரியா அணுகுண்டு வீசாமல் , அமெரிக்கா வீசாது அதன் கட்டுபாடுகள் அப்படி, சிக்கல் அப்படி


ஆனால் ஆப்கனில் வீசிய குண்டுகளை வீசலாம், அதனால் அதனை நேற்று ஆப்கனில் சோதித்துபார்க்க வாய்ப்பு உண்டு


விரைவில் வடகொரியா நொறுங்கும் ஓசை கேட்கலாம்..



No comments:

Post a Comment