Thursday, April 27, 2017

தமிழிசை பலரின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டார்....




Image may contain: 1 person, standing


தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இன்னபிற சீசனல் கட்சிகளின் பெரும் கவலை இப்பொழுது என்னவென்றால், அதிமுக விவகாரத்தில் பிஜேபி தலையிடுவது பற்றியது. சங்கு சக்கர சாமி வந்து குதிக்கின்றார்கள்


அப்படி அந்த அதிமுக இவர்களை மதித்த கட்சியும் அல்ல, கூட்டணியாக 4 சீட் கொடுத்ததும் அல்ல, ஆட்சியில் அமர்த்திய கட்சியும் அல்ல‌


கூட்டணி என அழைத்து ஒரு டீ கூட கொடுத்தகட்சி அல்ல, டீ என்ன? இவர்களை மதித்து அமர கூட வைத்ததில்லை





சுருக்கமாக சொன்னால் இப்படி சில கட்சிகள் இருப்பதே அதிமுகவிற்கு தெரியாத காலம் இருந்தது...

ஆக அந்த அதிமுகவில் என்ன நடந்தால் இவர்களுக்கென்ன? பிஜேபி என்ன செய்தால் இவர்களுக்கென்ன?

அந்த அதிமுக இருந்தால் இவர்களுக்கென்ன லாபம், அழிந்தால் இவர்களுக்கென்ன நஷ்டம்? ஒன்றுமில்லை

பின்னர் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், கண்டனம்?

வேறு ஒன்றுமில்லை, நாடெங்கும் காங்கிரசுக்கு பின்னடைவு, அது பின்னடைவு என சொல்வதை விட அன்றே காங்கிரசை பிடிக்காத கூட்டம் இருந்தது, நேரு அரசியலுக்கு லாயக்கில்லை என்றது, அது நேதாஜியினை விரும்பியது, சாஸ்திரியினை கொஞ்சம் ஓகே சொன்னது, இந்திராவின் கட்டுபாடுகளை தீரத்துடன் எதிர்த்தது

காங்கிரசுக்கு மாற்றாக ஏதும் செய்தே தீரவேண்டும் என்ற வெறி அதனிடம் வளர்ந்துகொண்டே இருந்தது

அந்த கூட்டம் காங்கிரசின் ஆட்சியின் சலிப்பில் வளர்ந்து, பெரும் கூட்டமாகி இப்பொழுது பிஜேபி பக்கம் சரிந்துவிட்டது

இந்த திருப்பம் தமிழகத்திலும் நேர்ந்துவிடுமோ?, இதுவரை நம்மை போல திண்ணையில் அமர்ந்திருந்த தமிழக பாஜக ஏதும் கோபுரத்தில் ஏறிவிடுமோ எனும் ஒருவகை அச்சம்

அப்படி ஏறிவிட்டால் தமிழிசை எல்லாம் பரபரப்பான அரசியல்வாதி ஆகிவிடுவாரே, அதனை காண்பதற்கு பதில் தஞ்சாவூர் கோவில் கோபுரத்தில் ஏறி குதித்துவிடலாமே எனும் ஒரு வகை பயம்

காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது

தமிழிசை பலரின் தூக்கத்தை கெடுக்க துவங்கிவிட்டார் என்பது மட்டும் புரிகின்றது...












வைகோவுக்கு மீண்டும் சிறை - ஜூன் 2வரை நீதிமன்றக்காவல்


தமிழகத்தில் ஆட்சி மாறியபின்பு வெளிவரும் ஐடியா வைகோவிற்கு வந்திருக்கலாம்


முன்பு காங்கிரஸ் ஆட்சி முடிந்தபின் வெளிவாருங்கள் என பிரபாகரனுக்கு இவர்தான் ஐடியா கொடுத்திருந்தார், ஆனால் மோடி வந்தபின்னும் வெளிவராமல் பிரபாகரன் தான் அடம் பிடிக்கின்றார்.












 


 

No comments:

Post a Comment