Friday, April 21, 2017

அடால்ப் ஹிட்லர்

18056667_10208985285204461_3941991616103291707_n.jpg


இந்த நூற்றாண்டின் ஹீரோ மற்றும் வில்லன் யாரென கேட்டால் கண்களை மூடிகொண்டு சொல்லலாம் அவன் அடால்ப் ஹிட்லர்


இந்த உலகம் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சிபெற்றிருக்கின்றது என்றால் அதன் மூலகாரணம் அவனே


சாதரண சிப்பாய், நல்ல ஓவியனும் கூட முதல் உலகப்போர் ஏன் ஏற்பட்டது என கண் கூடாக கண்டவன், அதாவது கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் அன்று காலணிகள் இருந்தன ஜெர்மனிக்கு இல்லை


வல்லரசு என்றால் வியாபாரம் தான் அடிப்படை, ஜெர்மன் அம்மாதிரியான வியாபாரத்திற்கு பெர்லின் பாக்தாத் இணைப்பு பாதையினை ஆஸ்திரியா வழியாக செய்ய இருந்தது, அப்படி செய்தால் ஜெர்மன் வியாபாரம் செழித்திருக்கும்


இன்று சிரியா வழியாக அரேபிய எண்ணெய் பாய கூடாது என ரஷ்யா நிற்பது போல அன்று பிரிட்டன் இருந்தது , விளைவு ஆஸ்திரிய இளவரசனை யாரோ கொல்ல அது போராயிற்று


போரில் ஜெர்மன் தோற்றது, அது கூட பிரச்சினை இல்லை அதன் பெரும் பலமான ஆஸ்திரியா ஹங்கேரி வல்லரசும், ஒட்டோமான் சாம்ராஜ்யமும் சிதறின, அதாவது ஜெர்மனின் முதுகெலும்பு உடைந்தது, போதா குறைக்கு வட்டி, நஷ்ட ஈடு என ஜெர்மன் திணறியது


இந்த காலத்தில்தான் ஹிட்லர் பேச தொடங்கினான், முதலில் சும்மாதான் பேசினான், ஆனால் கூட்டம் கூடிற்று வளர்ந்தான், சிறையும் அவனை தடுக்கமுடியவில்லை


நாடே சிக்கலில் இருக்க யூதர்கள் மட்டும் நாட்டுபற்றிலாதது போல இருந்தது அவனை உறுத்தியது, எல்லா நாட்டுடனும் உறவில் இருந்த யூதர்கள் ஜெர்மனை அவர்களுக்கு அடிமையாக்கியதாக கருவினான், யூதரை விட ஆரியர் உயர்ந்தவர் என சொல்லதொடங்கினான்


மக்கள் அதனை ஆமோதிக்க அவன் தலைவனுமானான், தேர்தலில் வென்றான் பின் இனி தேர்தலே இல்லை என்றான். ஆனந்தம் பட மம்முட்டி போல "எல்லோருக்கும் இருக்க வீடு, சாப்பாடு, காசு பணம் அதுக்கப்புறம்தான் எல்லாம்" என சொல்லிவிட்டான்


அந்நொடியில் அவனுக்குள் ஒரு சாமி இறங்கியது, நிச்சயம் இனியொருவன் அப்படி ஆளமுடியாது, இந்த உலகம் கண்ட மிக சிறந்த நல்லாட்சியினை வழங்கினான்


அவனின் மிக பெரும் ஆற்றல், நல்ல திறமையானவர்களை அடையாளம் கண்டு அமர்த்திகொண்டது, அவனின் நிதி அமைச்சர் அவனின் பெரும் பலம் அபார திட்டங்களை அவர்தான் தீட்டினார்


பொய் சொல்வதை கூட திறமையாக சொல்வது யார் என பார்த்து கோயபல்ஸை பிரச்சார அமைச்சராக‌ நிறுத்தியிருந்தான், ஹிட்லர் கால சர்ச்சைகளை எல்லாம் தன் அதிரடியான பொய்களால் மறைத்தான் கோயபெல்ஸ்


ஹிட்லரின் முதல் பலம் அவனின் வேகம், அந்த வேகத்தை ஜெர்மனிக்கு கொடுத்தான், அகண்ட சாலையில் கூடுதல் வேகம், நல்ல தரமான கார்கள், எந்திரங்கள், நொடியும் சுணங்காத அலுவலகம், கல்வி, மக்கள் நலம் 60 வயதானால் ஓய்வு மற்றும் பென்சன் என அவனது நிர்வாகம் அட்டாகசபடுத்தியது


உற்பத்தி பெருகியது, வெறும் 5 ஆண்டுகளில் அந்நாடு வல்லரசானது ஆம் அது பெரும் ஆச்சரியம், இனி சாத்தியமில்லா ஆச்சரியம், அலாவுதீன் பூதம் செய்தது போல ஆச்சரியம், இதோடு ஹிட்லர் காக்காவலிப்பிலோ அல்் லது விபத்திலோ செத்திருந்தால் வரலாற்றில் பெரும் இடம் அவனுக்குத்தான்


அது பெரும் வல்லரசானவுடன் ஹிட்லருக்குள் இருந்த பூதம் விழித்தது, வட்டி கட்ட முடியாது என பிரிட்டனை எதிர்த்தான், ஆனதை பார் என சர்வதேச சங்கத்தை மிதித்தான், உலகிற்கே சவால் விட்டான்


பழிதீர்க்க கிளம்பினான், ஐரோப்பாவில் அது அடிக்கடி நடப்பது, ஆனால் ஐரோப்பியரை அடிக்கும் பொழுதே யூதர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்தில் சாத்தான் புகுந்தான்


யூதருக்கு எதிராக அவன் செய்த அட்டகாசங்கள் சாத்தானும் நடுங்கும் ரகம், அது சாதரண மனிதனால் சாத்தியமும் அன்று, அப்படி கொடூரம் அது


அதோடு போரை துவக்கினான் , கண்ணசைவில் ஐரோப்பாவினை பிடித்தான், பிரிட்டன் மட்டும் பாக்கி இருந்தது , அவன் செய்த தவறில் முதலாவது பிரிட்டனை பிடிக்காமல் இருந்தது, இரண்டாவது சோவியத்தில் நுழைந்தது, மூன்றாவது அமெரிக்காவினை பற்றிய குறைந்த மதிப்பீடு


சோவியத்தில் அவன் நுழைய எண்ணெய் தான் காரணம், அன்றே அரேபியாவில் எண்ணெய் இவ்வளவு இருக்குமென தெரிந்தால் இன்றைய மொத்த அரேபியாவும் ஜெர்மனிக்கே இருந்திருக்கும், பாலஸ்தீனமுமில்லை, ஈராக், ஈரான், சிரியா, இஸ்ரேல் என எதுவுமே இருந்திருக்காது


ரஷ்ய குளிரும், ஸ்டாலினின் ராணுவமும் ஹிட்லரை தோற்கடித்தன, சர்ச்சில் வேறு தந்திரமாக அமெரிக்காவினை களம்மிறக்கினார்


ஹிட்லரை வீழ்த்தியது ரஷ்யாவின் ஸ்டாலின், நிச்சயமாக அவர்தான்


ஹிட்லர் வீழ்ந்த பின்புதான் அவன் நிர்வாகத்தை, ராணுவத்தை, அவனின் ஆராய்ச்சிகளை ஆராய்ந்தார்கள், ஆராய்ச்சியாளர்கள் பாதி ரஷ்யாவிற்கும், பாதி சோவியத்திற்கும் கடத்தபட்டார்கள்


அவனின் ஆராய்ச்சியும், அவன் கண்ட விஞ்ஞான கனவும் அப்படி இருந்தன‌


அதாவது எல்லாவற்றிலும் 80% நெருங்கியிருந்தான், கொஞ்சம் காலம் தள்ளியிருந்தால் ஜெர்மன் எங்கோ சென்றிருக்கும்


ஏ,கே 47 ரக துப்பாக்கி உண்மையில் அவன் கண்டுபிடிப்பு, கலோனிக்கோவ் கொஞ்சம் மாற்றினார். விமானம் தாங்கி கப்பல் முதல் நீர்மூழ்கி வரை ஹிட்லர் படுவேக முன்னேற்றம் காட்டியிருந்தான்..


தாக்குதல் எப்படி இருக்கவேண்டும், வியூகம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அவனின் கில்லாடிதனம் வெளிபட்டது, இன்று பின்லேடனை கொன்ற தாக்குதல் வரை அவன் தான் முன்னோடி..


ராணுவ வீரர்களுக்கான தகவல் தொடர்பில் ஹிட்லர் உச்சம் பெற்றிருந்தான் அதுதான் இன்று நாம் காணும் இணைய உலகின் அடிப்படை


விமானிகளுக்கான பிரத்யோக உடைகள் அவனிடமிருந்தன, அதுதான் இன்று விண்வெளி வீரர்கள் அணிவது, நீர்மூழ்கி கப்பலின் வித்தையும் அவனிடம் இருந்தது


அணுகுண்டின் ஆபத்தான நியூட்ரான் குண்டுகள் தயாரிப்பில் ஓரளவு வெற்றிபெற்றிருந்தான்


மகா முக்கியமாக ராக்கெட் தயாரிப்பு, அதுதான் பின் ஏவுகனைகளாகவும் விண்வெளி ராக்கெட்டுகளாகவும் மாறின, வட்ட வடிவமான விமானங்களை அவன் வைத்திருந்தான் என செய்தி உண்டு


அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வல்லரசானதும் விண்வெளி வெற்றிகளை குவித்ததும் இப்படித்தான்...


விதவிதமான மருந்துகளை கண்டுபிடித்து யூதர்மேல் சோதனை செய்தான், மருத்துவ உலகம் அதில்தான் முன்னேறிற்று


அவன் பெரும் போர் நடத்தியவன் தான், ஆனால் அவனின் எச்சத்தில் இந்த உலகம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது


அரசு, ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, நகரம், நிர்வாகம் , அறிவியல் என எல்லாவற்றிலும் தலைகீழ் திருப்பம் கொடுத்தவன் அவன்


இந்த நூற்றாண்டின் மிக சிறந்த , நம்பர் 1 திறமையாளன் அவன் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் யூதர்கள் விஷயத்தில் அவன் காட்டிய கொடூரத்திற்கு வரலாற்றில் மன்னிப்பே இல்லை


இன்னொன்று யூதர்களை அவன் கொன்ற விதம் குறித்து மிகைபடுத்தலும் இருந்தன‌


இன்று அவனின் பிறந்தநாள்


பெரும் அழிவுக்கு காரணாமானவன் என்றாலும் இந்த உலகத்தை அவன் மாற்றிபோட்டவன் என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது


பிரிட்டனையும், பிரான்சையும் அவன் அலற அடித்த அடியில்தான் அவை இந்தியா போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து ஓடின,


அந்த அடியில் அவை எழும்ப முடியாமல் கிடக்கும்பொழுது உலகெல்லாம் எப்படி ஆளமுடியும்?


அந்த பிரிட்டன் எனும் வல்லரசின் சக்தியினை அவந்தான் முறியடித்தான்..இந்திய விடுதலைக்கு ஹிட்லரும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது..


போர் வெறியும், யூத வெறுப்பும் இல்லாத ஹிட்லரைத்தான் எல்லா நாடுகளும் தலைவனாக தேடிகொண்டிருக்கின்றன‌


வரலாற்றில் நின்றுவிட்டவன் அவன், அவனுக்கு கல்லறை இல்லாமல் இருக்கலாம், ஆனால் வரலாற்றில் பெரும் இடம் உண்டு , அசைக்கமுடியா இடம் அவனுக்கு உண்டு


பெரும் அறிவாளி அவன்,


"முழு வளர்ச்சி பெறாத நாட்டில், பொறுப்பான மக்கள் இல்லா மக்களாட்சியில் நாடாளுமன்றங்களும், சட்ட சபைகளும் பட்டிமன்றமாக மாறும்,


வெறும் குப்பைமனிதர்கள் பேசிகொண்டிருப்பார்கள், திருடர்களும் ஊழல்வாதிகளும் ஆளவருவார்கள்


அவர்களாலும் அந்த சபையாலும் மக்களுக்கு கொஞ்சமும் பிரயோசனம் இருக்காத நிலை வரும்" என என்றோ சொன்னான்


அது எங்கு நிறைவேறியதோ இல்லையோ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைவேறிகொண்டிருக்கின்றது


அதுவும் தன் சகாவான சென்பராமன் பிள்ளையிடமும், பின் நேதாஜியிடம் நேராகவே சொன்னான் "இந்திய மக்களின் மனநிலைக்கு மக்களாட்சி சரிவராது, வரவே வராது நாட்டு பற்று இருந்தால் நீயே ஆண்டுகொள்.


அம்மக்களை கவனித்துபார், அவர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, அப்பதையில் அவர்கள் நாட்டை சீர்ழித்துவிடுவார்கள்"


எவ்வளவு அழகாக அவன் இந்தியாவினை கணித்திருக்கின்றான், அந்த‌ வார்த்தைகளுக்காக அவனை நினைத்து கொள்ளலாம்


அவனிடமும் சில நியாங்கள் இருந்தன, பெரும் புத்தகமாக பல வெர்ஷன்களாக எழுதபடவேண்டியது ஹிட்லரின் வாழ்வு, இதுவரை வந்திருப்பதும் நிச்சயம் முழுமையாக அவனை பற்றி சொல்லிவிடவில்லை


சுருக்கமாக இவ்வளவுதான் சொல்லமுடியும்..

No comments:

Post a Comment