Wednesday, April 19, 2017

அதிமுக உட்கட்சி குழப்பத்திற்கும் , பாஜகவிற்கும் சம்பந்தமில்லை : வெங்கய்ய நாயுடு

 

அதிமுக உட்கட்சி குழப்பத்திற்கும் , பாஜகவிற்கும் சம்பந்தமில்லை : வெங்கய்ய நாயுடு


மிசஸ் சவுந்திரராஜன், எங்கே சென்று தொலைந்தீர்கள்? இப்பொழுது இவர் இப்படி பேசலாமா? ஓடி சென்று வாயில் துணி வைத்து அடையுங்கள், அது காவி துணி என்றாலும் பரவாயில்லை..


தினகரன் கோஷ்டி கொலைவெறியில் இருக்கும் நேரம் இவர் ஏதாவது சொல்ல போய் உங்கள் மீது ஆசிட் வீசும் ஆபத்து இருக்கின்றது




அப்படி நடந்தால் நாடு தாங்குமா?


மிஸ்டர் நாயுடு, பாஜகவிற்கும் எதற்கும்தான் சம்பந்தம் இருக்கின்றது? பாபர் மசூதி இடிப்பிற்கு கூட பாஜவிற்கு துளி சம்பந்தம் கிடையாது என உலகில் யாருக்கு தெரியாது?

நீங்களாக ஏன் வீணாக சொல்லிகொண்டிருக்க வேண்டும்?




இனி எவனாவது அம்மா சமாதிக்கு செல்வான்?

சமாதியின் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் புரிகின்றது, இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் கூட மறந்தும் அம்மா சமாதிபக்கம் ஒருவனும் செல்லமாட்டான்

ராஜிவ் கொலையால் ஆட்சிக்கு வந்த ஜே, அந்த திருப்பெரும்புதூர் பக்கம் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை என்பது வரலாறு, ஆக அந்த சாபம் ஜெயா சமாதிக்கும் ஒட்டிகொண்டது


மிக சரியாக ஜெயா சமாதி எம்ஜிஆர் சமாதி அருகே ஒட்டிகொண்டது

அதனால் இனி எம்ஜிஆர் சமாதிக்கு செல்லவும் பலமுறை யோசிப்பார்கள்

அப்படியே கைவிடபட்டு இரண்டும் புதைந்து போகட்டும்..




 


No comments:

Post a Comment