Friday, April 14, 2017

தமிழகமும் தெலுங்கானாவும்...

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் என்பவரை காணவில்லை என பலர் பதிந்துகொண்டிருக்கின்றார்கள்


பூங்குன்றனை மட்டுமா காணவில்லை, ஜெயாவிற்கு காவல் இருந்த கருப்பு பூனை படை என்ன ஆனது என்பது வரை தகவல் இல்லை, அப்படை இவ்வளவிற்கும் டெல்லி கட்டுபாட்டில்தான் வரும்


ஜெயா சமையல்காரர் முதல் பலரை காணவில்லை....




இதில் பூங்குன்றனை காணவில்லை என குரல்கள்


விரைவில் அவர் விரைவில் நடராஜனோடோ அல்லது தினகரனடோ வந்து அம்மா சமாதியில் வணங்குவார், பார்த்து தொலைக்கவேண்டியது நமது தலைவிதி...






தெலுங்கானா முதலவர் 2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார் : செய்தி


தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் கூட கூலி முதல்வராகத்தான் பல மாதம் வேலை செய்தார் , இப்பொழுது பழனிச்சாமி கூட கூலி முதல்வர்தான்,


தமிழர்கள் எல்லாம் இதனை ஒரு செய்தி என சொல்லிகொண்டா இருக்கின்றோம்?




தமிழர்களின் தன்னடக்கம் அப்படி..







 


No comments:

Post a Comment