Tuesday, April 18, 2017

Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது

https://youtu.be/hZUUyrjzLRQ

Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது என முன்பு யாருக்காவது தெரியுமா?


அப்படி ஒரு அப்ளிக்கேஷன் இருந்திருக்கின்றது, இந்தியா போன்ற பெரும் நாடுகளில் எப்படி மார்கெட்டிங் பிடிப்பது என யோசித்திருக்கின்றார்கள்


விளம்பரபடுத்தி செலவு செய்து, அது மக்களை எப்படி சென்றடையுமோ? என யோசித்த அந்த கம்பெனி நிர்வாகிக்கு பளிச்சென ஒரு ஐடியா உதித்திருக்கின்றது




இந்தியாவினை ஏதாவது விஷயத்தில் சீண்டி விட்டால்? மக்கள் எல்லாம் கொதிப்பார்கள் அல்லவா? நமது பொருளும் விளம்பரமாகும் என அட்டகாசமாக சிந்தித்துவிட்டார்


"இந்தியா ஏழை நாடு, அங்கெல்லாம் பொருள் விற்கமுடியாது" என சொல்லிவிட்டார், அது ஊடகமெல்லாம் வருமாறு பார்த்தும் கொண்டார், விஷயம் வந்தாயிற்று


விடுவார்களா இந்தியர்கள்? ஏய் வெள்ளையா, நாங்களா ஏழைகள்? என கொதித்து சீறிகொண்டிருக்கின்றார்கள்


"நீ ஏழை உன்னால் என் கடையில் பொருள் வாங்கமுடியாது.. என ஒரு கடைக்காரன் சொல்லிவிட்டால் கிட்னியினை விற்றாவது வாங்கி காட்டும் மானமிக்க இந்தியர்கள் மனநிலை அவனுக்கு தெரிந்திருக்கின்றது


இதோ Snapchat என்றொரு விஷயம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது, ஒருபுறம் திட்டினாலும் இன்னொருபுறம் snapchat என்பது என்ன என தேடுகின்றார்கள்


பல மில்லியன் டாலர் செலவு விளம்பரம் செய்தாலும் கிடைக்காத வெற்றி, ஒரு வரியில் கிடைத்திருக்கின்றது


இதனை விட அருமையான மார்கெட்டிங் உத்தி எங்காவது உண்டா?


இப்பொழுது இதுதான் டிரெண்ட்


இதனை கவனித்த பன்னீர்செல்வம் "அம்மா விசுவாசிகளுக்கு மட்டுமே எங்களோடு இணையும் தகுதி உண்டு" என சொன்னால் எப்படி இருக்கும்?



No comments:

Post a Comment