Monday, April 17, 2017

மீண்டும் தன் காமெடிகளை அரங்கேற்றிவிட்டார் அங்கிள் சைமன் !!!

மறுபடியும் தன் காமெடிகளை அரங்கேற்றிவிட்டார் அங்கிள் சைமன்


இம்முறை அன்னார் விவசாய போராட்டத்தின் தன் வழக்கமான உச்சஸ்தான காமெடியினை செய்துகொண்டிருக்கின்றார்


அதாவது டெல்லியில் தமிழக விவசாயிகளை ஓட அடிக்கின்றதாம் பாஜக அரசு, அதனை கண்டித்து இவர் விவசாயிகளிடம் என்ன பேசுகின்றார்? இப்படி கத்துகின்றார்




"என் தமிழின விவசாயிகளை விரட்டும் டெல்லியே..என் வோட்டு வேண்டுமா? என் வோட்டினை வாங்கி எனக்கே திருவோடு கொடுக்கின்றாயா


என் அன்பு பிள்ளைகளே..மனதில் கொள்ளுங்கள்..உங்கள் வோட்டினை வாங்கி உங்களையே தெருவில் விட்டுவிட்டார்கள்


இந்த பாஜகவிற்கு என்றுமே வாக்களிக்காதீர்கள்"


என்றைக்கு தமிழகம் பாஜகவிற்கு வாக்களித்தது? என யோசிக்கும் முன்பே. ஒரு கூட்டம் தனக்கு ஒதுக்கபட்டிருக்கும் அந்த 5 நொடியில் கைதட்டுகின்றது,


அங்கிள் சைமன் எல்லோரும் ஒழுங்காக கை தட்டுகின்றானா? என சுற்றி பார்த்துகொள்கின்றார்


நமக்கோ சந்தேகம் எழுகின்றது,


36 அதிமுக எம்பிக்கள்தான் இருக்கின்றனர், பாராளுமன்ற பட்டியல் அதனைத்தான் சொல்கின்றது, தம்பிதுரை கூட அடிக்கடி இடையன் ஆடுகளை எண்ணுவது போல சரிபார்த்துகொள்கின்றார்


வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளை போல பொத்தி பொத்தி பாதுகாக்கபடும் 122 எம் எல் ஏக்கள், பன்னீர் கோஷ்டி என எல்லோரும் அதிமுகவினர், அமைச்சர்களும் அவர்களே, ஆட்சியும் அவர்கள் தான்.


டெல்லியில் விவசாயிகள் கோவணம், அம்மணம் என அழும்பொழுது தமிழக அமைச்சரின் வீட்டில்தான் தங்கமும், பணமும், கறுப்பு பணமும் அகப்படுகின்றது, அதுவும் அதிமுக அமைச்சர்


தமிழகத்திலும் ஆளும் கட்சி அதிமுகதான்,


பின் எந்த தமிழன் மோடிக்கு வாக்களித்தான் என இவர் கத்திகொண்டிருக்கின்றார்? சுத்த பைத்தியகாரதனமாக இல்லை?


உண்மையில் அன்னார் கத்தவேண்டியது என்ன?


"தமிழகம் அனுப்பிய‌ 36 எம்பிக்கள் என்ன செய்கின்றார்கள்?, முதல்வர் அதிமுக பழனிச்சாமி என்ன செய்கின்றார்?


வோட்டு போட்ட மக்களை திருவோட்டோடு நிறுத்தியது அதிமுக.."


இப்படி அல்லவா கத்தவேண்டும்? மக்கள் வாக்களித்த அதிமுகவிற்கு எதிராக அல்லவா கத்தவேண்டும்


மக்கள் வாக்களிக்காத பாஜகவினை திட்டுவாராம், ஆனால் எல்லா வாக்குகளை வாங்கிய அதிமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசமாட்டாராம்


ஏதாவது புரிகின்றதா? இதுதான் அன்னாரின் தமிழ் தேசியம்


ஏன் அங்கிள், மனசாட்சியே இல்லாமல் தமிழர்கள் வாக்குகளை வாங்கிய பாஜக மத்திய அரசு துரோகம் செய்கின்றது என சொல்கின்றீர்களே? கொஞ்சமாவது சுய உணர்வு இல்லையா?


உங்களுக்குத்தான் இல்லை, கேட்கும் மக்களுக்குமா இல்லாமல் போகும்??


இவரை கூட விட்டுவிடலாம், ஆனால் இதற்கு கைதட்டிய அந்த கொஞ்சம்பேர் கவனிக்கதக்கவன்...


இன்றல்ல நாளையல்ல என்றுமே பாஜக தமிழகத்தில் வோட்டு வாங்காது, வருங்காலத்திலும் வாங்காது


அப்பொழுது சைமன் என்ன சொல்வார் தெரியுமா? சிரிக்காதீர்கள், ஆனால் இப்படித்தான் உச்சஸ்தானியில் சொல்வார்


"காங்கிரசை தமிழகத்தை விட்டு விரட்டியது போலவே, பாஜகவினையும் தமிழகத்தை விட்டு நானும் , என் கட்சியும் விரட்டிவிட்டோம்.."


உச்சகட்ட காமெடி என்னவென்றால், யோகி ஆதித்யநாத் அடுத்த பிரதமராம், அதனை இவர் தடுப்பாராம்


எப்படி மோடியினை தடுத்திருப்பது போலவா அங்கிள்?



No comments:

Post a Comment