Sunday, April 23, 2017

பின்வாசல் வழியாக நுழையும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை: வெங்கய்யா நாயுடு

அதிமுகவினருக்கு ராமசந்திரன் தொப்பி கொடுத்த "திருடாதே" படம் ஓடிகொண்டிருக்கின்றது


மனிதர் தொப்பியும் தலையுமாக வந்து தினகரனை நினைவுபடுத்திகொண்டே இருக்க்கின்றார்


ராமசந்திரன் தீர்க்கதரிசி, அவரை விட அந்த படத்தின் தங்கவேலு பெரும் தீர்க்கதரிசி




"பெண்கள் இங்கு காரோட்டுகின்றார்களா?" என ஆச்சரியமாக கேட்ட சரோஜாதேவியிடம் அசால்டாக சொல்கின்றார்


இது என்ன பிரமாதம்?, இன்னும் 10 வருஷத்தில எல்லா ஆம்பிளையும் சமையல் கட்டில்தான் இருப்பான்"


இவ்வளவு சரியாக யாராவது கணிக்க முடியுமா?, என்ன ஒரு தீர்க்கதரிசனம், :)


இந்த காட்சியினை கண்ட பாகம்பிரியாள் முகத்தில் மர்ம புன்சிரிப்பு வந்து மறைகின்றது....









தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழையும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை: வெங்கய்யா நாயுடு

முன்வாசல் நெவர், ஜன்னல் வழியாகவோ கூரையினை பிய்த்தும் இறங்கமுடியாது, பின் வாசல் வழியாகவும் வர முடியாது என்பதை , நோக்கம் இல்லை என சொல்லியாயிற்று

இனி சுரங்கம் தோண்டி திடீரென உட்புகுந்துவிடும் திட்டம் இருக்குமோ


தமிழகத்தில் கால்பதிக்க்க முடியாது என்பதை, அப்படி நோக்கம் இல்லை என சொல்லிவிட்டு செல்கின்றார்கள் அல்லவா?

இதுதான் அப்படி பழமொழியானது, எப்படி?

"பெரிய மனுஷன் அடிபட்டால் வெளியில் சொல்லமாட்டான்"






 

No comments:

Post a Comment