Wednesday, April 19, 2017

சசிகலா தலமையினை ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன?


18033883_10208967668444053_8845739981135169861_n.jpg


அவர்கள் சசிகலா தலமையினை ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன?


அதிமுக எனும் கப்பல் மூழ்க தொடங்கி 6 மாதம் ஆயிற்று, அதன் சத்தம் மட்டும் இப்பொழுது கேட்கின்றது


யார் வந்தாலும் இனி காப்பாற்றமுடியாத கட்சி அது.


தவித்த ஒருவருக்கு மருத்துவமனையி சிகிச்சை அளிக்காமல், இறந்தபின் அடக்கம் செய்யும் இடத்தில் காப்பாற்ற முயற்சி நடப்பது போல இருக்கின்றது இவர்கள் செயல்பாடு


இவர்கள் யாரும் சுய தைரியத்தில் பேசவில்லை, திரைமறைவில் நிற்கும் நபரை பார்த்து பார்த்து பேசுவது நன்றாக தெரிகின்றது


அதிமுக என்றொரு கட்சி முன்பொருகாலத்தில் இருந்தது எனும் சொல்லும் நிலை வந்தாயிற்று


"அதிமுக என்பது ஒரு நடிகனுக்கான அபிமான கட்சி, சினிமா கவர்ச்சி கட்சி அதற்கு கொள்கை எனும் ஆணிவேர் இல்லை, ஒரு மேக்அப்பில் அது ஜொலிக்கின்றது, அது கொஞ்சநாளில் ம்றைந்துவிடும்.." என அன்றே சொன்னார் கலைஞர்


அது அடுத்த 10 ஆண்டுகள் கழிந்தும், ஜெயா எனும் மேக் அப்பில் ஜொலித்தது


( இன்னும் நமீதா, விந்தியா தயவில் அக்கட்சி ஜொலிக்க வாய்ப்பு 50% உண்டுதான், ஆனால் இன்னொரு ஜெயலலிதாவினை உருவாக்க அங்கு இன்னொரு நடராஜனோ, சோ ராமசாமியோ, இந்திரா காந்தியோ
ராஜிவ்காந்தியோ இல்லை )


இப்போது அதிமுக முடிந்துவிட்டது


ஆக கலைஞரின் தீர்க்கதரிசனம் கொஞ்ச காலம் தள்ளி பலித்துவிட்டது....


டெல்லி எப்படி எல்லாம் விளையாடும், எப்படி எல்லாம் சமாளிக்கவேண்டும் எனும் அனுபவமில்லாதவர்கள் முன் அக்கட்சி சிதறி அழிகின்றது


பெரும் புத்திசாலியான கலைஞர் கணித்தது நிறைவேறிவிட்டது..


எல்லாம் நிறைவேறிற்று....

No comments:

Post a Comment