Monday, April 17, 2017

பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணையுமா? தினகரன் கதி ??

சமீப காலமாக ஒரு விஷயம் கசிவதை உணரமுடியும், அதாவது பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் இணைந்து செயல்படுவார்களாம், தினரகன் கும்பல் வெளியேற்றபடுமாம், இதற்கான வேலை நடைபெற்று வருகின்றதாம்


இது எந்த திட்டத்தின் சாயல் தெரியுமா? 1989களில் நடந்த அதிமுக தந்திர திட்டத்தின் சாயல்


1989களில் ஜாணகி, ஜெயா அணி என பிரிந்து கிடந்தது நடிகர் கட்சி, ஜாணகி எனும் முகமூடி அணிந்திருந்தது ஆர்.எம் வீரப்பன், ஜெயா முகமூடி அணிந்தது நடராஜன்


இதில் இருவரையும் மோதவிட்டு ஏதாவது செய்யமுடியுமா? என முயற்சித்தது ராஜிவின் டெல்லி , தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் தலமையினை ஏற்று, அதற்கு முதல்வர் பதவி என்றால் ஜெயாவிற்கு உதவ தயார் என்றது டெல்லி


இந்த இடத்தில் நடராஜன் அழகாக ஆடினார், சும்மா சொல்ல கூடாது ராஜாஜி, கலைஞர், சோ ராமசாமி போன்றோரின் அடுத்த இடம் தமிழக அரசியலில் நடராஜனுக்கே


டெல்லி தங்களை நெருக்குவதை உணர்ந்த நடராஜன் பதட்டமில்லாமல் கூட்டணி பேசினார், காங்கிரஸ் 70 தொகுதிகளை கேட்டது


நடராஜன் "உங்களுக்கு 70 தொகுதி தருவதற்கு பதிலாக, ஜாணகி அணிக்கு 50 தொகுதிகள் கொடுத்து கூட்டணி அமைப்போம், தனியாக தமிழகத்தில் என்ன செய்வீர்கள்? கலைஞர் கூட‌ விபி சிங், மண்டல் கமிஷன் என அந்த அணி" என்றார்


டெல்லி திரும்ப கேட்டது? ஜாணகி உங்கள் எதிரி அல்லவா? கூட்டணிக்க்கு வருவாரா?


அதனை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என்று டெல்லியினை திருப்பி அனுப்பிய நடராஜன், ஜெயா ஜாணகி என இரு அணிகளும் இணைவதாக செய்திகளை பரப்பினார், தமிழகம் பரப்பானது கட்சிக்கு ஜாணகியும், ஆட்சியில் பெரும் பங்கு ஜேவிற்கும் என்றெல்லாம் ஒப்பந்தம் கசியவிடபட்டது


ஜாணகி அணியும் இதனை நம்பி காங்கிரசை தவிர்த்தது, நாசமாய் போங்கள் என சாபமிட்ட டெல்லி வெறுத்து தனிகொடி தூக்கி தூக்கியது


இனி டெல்லி ஒதுங்கிற்று, வராது என் உறுதியானவுடன், கட்சிகள் இணைந்தால் ஜெயாதான் தலைவர், அவரே முதல்வர், இதனை ஏற்றால் ஜாணகினை இணைக்கலாம் என்றார்


எல்லோரும் திகைத்தனர், ஜாணகி அணி தலைமீது கைவைத்து அழுதது, காங்கிரஸ் தனியாக நின்றது, நிலமை ஜெயாவிற்கு சாதகமானது


இன்று பாஜக டெல்லி அதே 1989 போல ஏதோ செய்ய நினைக்க, இப்பொழுது எடப்பாடி, பன்னீர் இணைப்பு என செய்திகள் வருகின்றன, அவைகள் தினகரனுடன் மல்லுகட்டுவதாகவும் செய்திகள்


கடந்த காலங்களை நினைத்துபார்த்தால் இவை எல்லாம் நடராஜனின் விளையாட்டுகள் என்றே தோன்றுகின்றது, பாஜகவிற்கு பெப்பே காட்டிவிட்டு, பன்னீரை உள்ளே இழுத்துபோட்டு சாத்தும் திட்டமாக இருக்கலாம்


மற்றபடி மன்னார்குடி குடும்பம் எல்லாம் அதிமுகவினை விட்டுவிடும் என்பதெல்லாம் கலைஞர் அம்பாள் கோவிலில் பஜனை பாடுவார் என எதிர்பார்பதற்கு சமம்


ஆக டெல்லியினை எப்படி கழற்றிவிட்டு, ஓட அடிப்பது எப்படி ஒரே கல்லில் பன்னீர், மோடி என எல்லோரையும் வீழ்த்துவது எப்படி என்ற விளையாட்டில் அதிமுக இறங்கி இருக்கின்றது


யார் வெல்வார்கள் என்பது தெரியாது, 1989களில் நடராஜனுக்கு ஒத்துழைத்த காலம் இன்னும் ஒத்துழைக்குமா என்பதும் தெரியாது


டெல்லியின் விளையாட்டுக்களை எதிர்ப்பது பெரும் கலை, கலைஞர் முடிந்தவரை சமாளித்தார், 1970களில் திமுக அதிமுகவினை இணைக்க அவர் எடுத்த நடவடிக்கைகளும், முதலில் சம்மதித்து பின் டெல்லி முறைக்கவும் ஓடியே சென்ற ராமசந்திரானால் அது முடியாமல் போனதற்கும் ஒரிசாவின் பிஜூ பட்நாயக்கே பெரும் சாட்சி


அதன் பின் அதிமுக 1989ல் டெல்லி சோதனையினை கடந்தது, இன்று எதிர்கொள்கின்றது


திமுகவோ 1977க்கு பின் டெல்லியின் சோதனைகளை அனாசயாமக கடந்து வருகின்றது, வந்திருக்கின்றது, 1990களில் வைகோ எனும் காமெடியன் செய்த கோமாளி காட்சிகளை எல்லாம் தூசாக தட்டி தன்னை நிறுத்திகொண்டது


கலைஞரின் ஆற்றல் அப்படி,


நடராஜனோ ஜெயா எனும் முகமூடி அணிந்து வென்றவர், இன்று நிஜமுகத்துடன் தடுமாறுகின்றார், கூடவே கடலோர கவிதைகள் சத்யரஜினை கிளைமேக்ஸில் வலைபோட்டு பிடிப்பது போல ஏக வழக்குகள், சிக்கல்கள். தப்புவது சிரமம்.


பார்க்கலாம், வெல்ல போவது யார் என்பதை காலம் காட்டும்..

No comments:

Post a Comment