Sunday, April 30, 2017

ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள், இன்று ...



Image may contain: one or more people


72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது


ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்


உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே அழியும் என ஆளாளுக்கு யோசித்துகொண்டிருந்தார்கள்


ஹிட்லர் மீது இருந்த பிம்பம் அப்படி..


ஆனால் ரஷ்யாவிலிருந்து நாஜிக்களை துரத்திய செம்படையினர் தீரமாக ஜெர்மனில் நுழைந்து ஹிட்லரை தேடின, இறுதியில் எரிந்த நிலையிலிருந்த இரு உடலை கைபற்றின, ஒன்று ஹிட்லர் எனவும் இன்னொன்று ஈவா பிரவுண் எனவும் சொன்னார்கள், கூடவே ஹிட்லரின் பிரியமான நாயின் சடலமும் கிடைத்தது


ஹிட்லர் தன்னை சுட்டு செத்தார், உடலை எரிக்க சொன்னார் என அவரின் காவலர்களில் ஒருவன் வாக்குமூலம் சொன்னான் , அவன் மட்டும்தான் சாட்சி, அவன் சொன்னதகவல்தான் உலகெல்லாம் சொல்லபடது


பின்பு அந்த மண்டையோட்டை ஆராய்ந்த ரஷ்யர்கள் திகைத்தார்கள், காரணம் அது ஹிட்லரின் மண்டையோடு அல்ல, அல்லவே அல்ல.


அப்படியானால் ஹிட்லர்?


இன்றுவரை தெரியாத மர்மம், ஜெகஜால கில்லாடியான ஹிட்லரின் இறுதிகாலம் இன்றுவரை மர்மமே, இதில் பலவகையான அரசியல் உண்டு


இந்த உலக அரசுகள் எல்லாம் மர்மமானவை, அவை ஏன் சில விஷயங்களை சொல்லாமல் இருக்கின்றன என்பதில் பெரும் அரசியல் உண்டு


உதாரணம் நேதாஜி என்ன ஆனார் என்பது, இன்றும் பிரபாகரனுக்கு சிங்கள அரசு மரணசான்றிதழ் கொடுக்க தயங்குவது, பின்லேடனை கொன்றதாக சொன்ன அமெரிக்கா கடைசிவரை அவர் முகத்தை காட்டாதது


ஆனால் சதாமினை தூக்கிலிட்டார்கள் ஏன்? அது அரபு உலகை ஆட்டி வைக்க, ஆனால் பின்லேடனை மர்மமாக புதைத்தார்கள்


இப்படிபட்ட மர்மங்களில் பெரும் மர்மம்தான் ஹிட்லரின் கடைசி காலம், அவனின் சாவு


ஹிட்லர் வாழ்ந்த நாட்களில் அவன் மீது நடத்தபட்ட கொலைமுயற்சி ஏராளம், அதனால் அப்பொழுதே அவன் தன்னை போல ஒருவனை நடமாட விட்டுவிட்டு அவர் பதுங்கிகொண்டார் என்பதும் ஒரு தியரி


அதனை உறுதிபடுத்தும் விதமாக அவருக்கு கொடுக்கபடும் உணவுகளை உண்டு சரிபார்த்து கொடுத்த பெண்ணின் சந்தேகமும் முக்கியமானது, அவள்தான் தினமும் ஹிட்லருக்கு முன்பு சாப்பிடுவாள், அவள் சாகவில்லை என உறுதிபடுத்தபட்டால்தான் ஹிட்லர் அந்த உணவினை உண்பார்


அப்பெண்ணும் கடைசி காலங்களில் ஹிட்லரை காணவில்லை என்றுதான் சொன்னாள்.


இன்னொன்று தோல்வி முகம் தெரிந்தவுடன் அவர் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் எனும் தியரி உண்டு, அக்கால அரசியல் அப்படி


இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் என்றொரு கூட்டணிதான் நமக்கு தெரியும், தெரியாத கூட்டணி அர்ஜெண்டினா. அதற்கு கத்தோலிக்க மதம், பிரிட்டன் எதிர்ப்பு என ஏராளமான காரணங்கள்


ஐரோப்பாவில் ஹிட்லர் படைகள் தோற்க தோற்க அவர்கள் எல்லாம் அர்ஜெண்டினாவிற்குத்தான் தப்பினார்கள், ஹிட்லரின் தளபதி ஈச்மென் கூட இஸ்ரேலால் பின் கொண்டுவரபட்டது எல்லாம் வரலாறு


அப்படி ஹிட்லரும் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் என ஏகபட்ட தியரிகள் உண்டு, ஆனால் அவர் சிக்கவில்லை


அக்காலத்தில் ஹிட்லரிடம் நவீன வாகனங்கள் இருந்தன, நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன, பறக்கும் தட்டு போன்ற ஒரு அதிவேக விமானம் அவனிடம் இருந்தது என்பது உண்மை


அதிலொன்றில் அவர் தப்பியிருக்கலாம் என தேடினார்கள், அந்த ஜெகஜால கில்லாடி சிக்கவே இல்லை


ஆக ஹிட்லர் தப்பி அர்ஜெண்டினாவிற்கு சென்றான் என்பது உளவுதுறைகளின் முடிவு, அவன் அகப்படவில்லை, மண்டையோடும் அவனது இல்லையெனில் அவன் எங்கே?


ஹிட்லருக்கு பின் அமெரிக்காவும் ரஷ்யாவும் மோதலில் இறங்க, ஹிட்லரை தேடுவதை குறைத்தார்கள், அவன் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலையும் காரணம்


இந்த உலகத்திற்கு புரியாத புதிர் ஹிட்லர், இன்றுவரை அவனை முழுக்க யாருக்கும் புரியவில்லை, ஆனால் மகா அசாத்தியமான மனிதன்


அவனின் மரணம் கூட மர்மம்தான், அவன் போர்கலை வித்தகன், அவனின் போர்வியூகங்கள் எல்லாம் அபாரமானவை


நார்மாண்டி முற்றுகை நடந்தால் கூட எப்படி முறியடிக்க வேண்டும் என வியூகம் எழுதிவைத்துதான் தூங்கிகொண்டிருந்தான், அவனை எழுப்பாமலே ஜெர்மன் படை அந்த வியூகத்தில் போரிட்டது


அப்படிபட்ட ஹிட்லர் தான் தோற்றால் என்ன செய்யவேண்டும் என நிச்சயம் யோசித்திருப்பான், அதனால்தான் அவன் தப்பியது 100% வாய்ப்புள்ள விஷயம் என உலகம் சொல்கின்றது


மற்றபடி அவனின் இறுதிநாட்கள் என சொல்லபடுவதெல்லாம் கட்டுகதைகள், அந்த மர்மான நாட்கள் ஹிட்லருக்கும் ஈவா பிரவுணும் மட்டுமே அறிந்த ரகசியங்கள்


எப்படியோ, உலகத்தை தன் கண் அசைவில் ஆட்டுவித்த ஒரு பெரும் சத்திவாய்ந்த தலைவனின் சகாப்தம் முடிந்த நாள் இன்று


உலகம் தன் கனவுகளை, தன் திட்டங்களை, தன் ஆராய்ச்சிகளை பயன்படுத்தி பல துறைகளில் முன்னேறிகொண்டிருப்பதை பார்த்துகொண்டே தென் அமெரிக்காவில் எங்கோ வாழ்ந்தபடி மறைத்திருக்கின்றான் ஹிட்லர்.


முக்கியமானவர்களின் மரணங்களில் மர்ம ஆட்டம் ஆடும் வல்லரசுகள், ஹிட்லர் தப்பிய மர்மத்தை சொல்லாமல் அதனை எப்படியோ வசனம் எழுதி மறைக்கபார்த்தன , முழுதும் மறைக்க முடியவில்லை


ஹிட்லர் கடைசியிலும் தன் எதிரிகள் முகத்தில் பூசிய கரி இன்றுவரை அப்படியே இருக்கின்றது













 


 

No comments:

Post a Comment