Thursday, April 27, 2017

அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர்....





சீனா அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர் வைத்துவிட்டதாம், தமிழகத்தில் பலர் பொங்கிகொண்டிருக்கின்றார்கள்


அவர்களின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது எனினும் அவர்களின் சொந்த ஊர் பெயர்களை வெள்ளையன் குதறிவைத்துவிட்டு போனதை அப்படியே வைத்திருக்கின்றார்கள்


டிரிச்சி, தஞ்சூர், டுடுகுரின், ஊட்டி, என பல ஏராளமான ஊர்கள் வெள்ளையன் அழைக்க தொடங்கிய ஊர்பெயர்கள் அப்படியே நீடிக்கின்றன,





அவன் சுருக்கியும், இன்சியல் வைத்தும், வெட்டியும், நறுக்கியும் அழைத்த பெயர்களில்தான் இன்றும் தமிழக நகரங்களும் ஊர்களும் அழைக்கபட்டு கொண்டிருக்கின்றன..

அவன் வாயில் அவ்வளவுதான் நுழையும், நமக்கு ஏன் நுழையாது?

சொந்த ஊரின் பெயரை முதலில் வெள்ளையனின் பெயர்மாற்றத்திலிருந்து தமிழ்படுத்துங்கள், அதன் முழு பெயரோடு அழகாக அழையுங்கள்

முதலில் அந்த பழம்பெயரை மீட்டெடுங்கள், எங்கோ இருக்கும் அருணாசல பிரதேசத்தை பின்னர் பார்த்துகொள்ளலாம்...









தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கூடாது: இலங்கை பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

இதிலெல்லாம் இந்தியா கவனமாக இருக்கும், விட்டே கொடுக்காது. கடுமையாக வலியுறுத்தும்

இன்னொரு முறை தாக்குதல் நடத்தினால் உடனே அப்பொழுதும் வலியுறுத்தும், வலியுறுத்திகொண்டே இருக்கும்...




 

 



 

No comments:

Post a Comment