Wednesday, April 19, 2017

மிஸ்டர் மல்லையா..


18033796_10208967153031168_6334999960367343530_n.jpg


இந்திய அரசு "பிராது" கொடுத்திருப்பதால் தன் மீது நெருக்கடிகள் அதிகரிப்பதை உணர்ந்த மல்லையா லண்டன் காவல் நிலையத்தில் ஆஜராகியிருக்கின்றார், நடைமுறைப்படி கோர்ட்டில் நிறுத்பட்டிருக்கின்றார்


இப்ப்பொழுது ஜாமீன் வழங்கபட்டிருக்கின்றது, கவனிக்கவும் உடனடியாக இந்தியாவிற்கு விலங்கு போட்டு அனுப்பிவைக்கபடவில்லை


இனி சட்ட ரீதியான தர்க்கம், அது இது என ஏக நடைமுறைகள் உண்டு, பெரும் தொழிலதிபரான மல்லையா ஏன் ஆஜரானார்? என்ன முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றார் என ஒவ்வொன்றாக வெளிவரும்




ஆனால் உடனடியாக இந்தியா கொண்டுவரும் வாய்ப்பு குறைவு


அதற்குள் ஏதோ சதாம் உசேன் போல வளைக்குள் மல்லையா பதுங்கி கிடந்தது போலவும், இந்தியபடை வழிகாட்ட ஸ்காட்லாந்து யார்டு சாகசமாக பிடித்தது போலவும், மோடி லண்டன் சென்று மல்லையா கன்னத்தில் அறைந்து, கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் அழைத்து வரப்போவது போலவும் ஏக அலப்பறைகள்


எப்படியோ மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதங்களை தொடங்கிவிட்டார், அவர் இப்படி அழலாம்


"எசமான் தொழில் பிரமாதமா இருந்துங்க‌ தமிழ்நாடு முழுக்க என் சரக்குதான் ஓடிச்சுங்க, அத நம்பி கடன் வாங்குனேங்க‌


ஆனா திமுக, அதிமுக நபர்கள் எல்லாம் பீர் கம்பெனி, சரக்கு கம்பெனி தொடங்கி அவங்களே டாஸ்மாக்கு வித்துட்டாங்க, என் தொழில் அதுலதான் பாதிச்சுங்க,


நான் தான் முதல்ல ஹெலிகாப்டர் எல்லாம் கொடுத்து ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு உதவுனேங்க, அந்த அம்மா என்கிடா தொழில்படிச்சி என்னையே கவுத்துட்டுங்க‌


அதுல இருந்து இன்னும் எழும்பலிங்க, அந்த அம்மா இருக்குற நாட்டுக்கு போக விருப்பம் இல்லாம இருந்தேனுங்க, இனி அந்த அம்மா இல்லியாம், இனி போறேனுங்க எசமான்"


மல்லையா விவகாரம் முடிவுபெறலாம்


இந்த தாவூத் இபாரஹிம் என்பவராவது ஒருவகை தீவிரவாதி, பாகிஸ்தானில் பாதுகாப்பாக வாழ்பவர் நெருங்கமுடியவில்லை


இந்த லலித்மோடி என்றொருவர் உண்டல்லவா? இந்த ஐபிஎல் பிதாமகன் அவர், ஐபிஎல் மட்டுமல்ல பலகோடி ரூபாய் மல்லையா போலவே ஆட்டையினை போட்டவர் அவர்


அவர் எப்பொழுது அகப்படுவார்? அவரை எப்பொழுது தூக்குவார்கள் என தெரியாது, அவரும் லண்டனில்தான் இருந்தார்


கவனியுங்கள் இந்திய அரசு சொல்லியும் மல்லையா தானாக வந்துதான் "அரஸ்ட் மீ" என சொல்லியிருக்கின்றார், பிரிட்டன் அரசு அவ்வளவு தாரளமாக இருந்திருக்கின்றது அல்லது இந்திய கோரிக்கைக்கு அவ்வளவுதான் மரியாதை


இப்பொழுது அல்ல, முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள், ராஜிவ் கொலையின் சூத்திரதாரி கிட்டு என பல இந்தியவிரோதிகள் லண்டனில் இருக்கும்பொழுதும் அது அப்படித்தான் நடந்துகொண்டது


ஏன் என்றால் அதுதான் ஒருவகை அரசியல், இறுமாப்பு, நீ கேட்டவுடன் நான் தரவேண்டுமா? எனும் மேட்டிமை என ஏராளம்..


இதில் மல்லையாவிடம் அவர்கள் தாராளம் காட்டுவதில் ஆச்சரியமில்லை, மல்லையா உடனடியாக வர வாய்ப்புமில்லை


இந்த தாராளம் இருக்கும் வரை லலித்மோடி அங்கிருந்து ஐபிஎல் பார்த்து கைதட்டிகொண்டே இருக்கலாம்...



No comments:

Post a Comment