Friday, April 28, 2017

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் ...

வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பதால் அதனை நொறுக்க அமெரிக்கா கிளம்பிவிட்டதாக பல ஊடகங்கள் சொல்லிகொண்டிருக்கின்றன‌


இன்றைய தேதியில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது, இஸ்ரேலிடம் உள்ளது, ஈரானிடம், பாகிஸ்தானிடம், உக்ரைனிடம் என எல்லோரிடமும் உள்ளது


அப்படி தடுப்பதாக இருந்தால் முன்பே தடுப்பார்கள், சதாமின் அணுவுலைகளை, சிரிய அணுவுலைகளை இஸ்ரேல் தகர்க்கவில்லையா? யார் கேட்டார்கள்?




அப்படி பாகிஸ்தான் அணுகுண்டினை ஏன் அமெரிக்கா தடுக்கவில்லை என கேள்வி எழலாம், அது அரசியல், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால்தா இந்தியாவினை அடக்கி வைக்க முடியும் எனும் அரசியல்


இதில் வடகொரியா மட்டும் வைத்துகொள்ள கூடாது என்பது ஏன்?, விஷயம் அணுகுண்டு அல்ல‌


வடகொரியாவின் முக்கிய தொழில் ஆயுத ஏற்றுமதி, அந்த விஷயத்தில் அவர்கள் கொள்கை தாராளம், யார் கேட்டாலும் கொடுப்பார்கள், யார் என்றால்? அது தீவிரவாதியானாலும் சரி


முன்பு புலிகளுக்கு எல்லா ஆயுதங்களும் இவர்கள்தான் கொடுத்தார்கள், பாலஸ்தீன ஹமாசுக்கு, ஆப்ரிக்க போராளிகுழுக்களுக்கு என உலகெல்லாம் சப்ளை செய்வது இவர்கள்தான், இதுதான் முதல் பிரச்சினை


ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லாததால் சபையில் பேசமுடியாது, ஆனால் கொடுப்பது இவர்கள்தான்


ஈரானுக்கு ஏவுகனை நுட்பமும், அணுசக்தியும் வடகொரியா கொடுத்தது என்பது உலகறிந்தது


இப்படி உலகெல்லாம் ஆயுதங்களை அள்ளிகொடுக்கும் வடகொரியாவினை தட்டி வைக்காவிட்டால் நாளை அணுகுண்டை கூட கொடுக்க துணியும் என்பது மேல்நாடுகளின் கணிப்பு


வடகொரியா ஏதோ ஒரு பெரும் தீவிரவாத இயக்கத்திற்கு பெருந்தொகை ஆயுதங்களை கொடுத்து சிக்கியிருக்கின்றது, அந்த கடுப்பில் அடிக்க கிளம்பியிருக்கின்றார்கள்


வடகொரியா "ஏய்..என்னை தொட்டால் கீச்சுறுவேன்.." என வழக்கமாக ரவுடி சீறுவது போல சீறிகொண்டிருக்கின்றது



No comments:

Post a Comment