Saturday, April 8, 2017

இந்த தருண்விஜய் ஏன் அப்படி சொல்லவேண்டும்?

17798983_10208863135950806_5699226319502080707_n.jpg


டெல்லியிலும் நொய்டாவிலும் ஆப்ரிக்கர்கள் தாக்கபட்ட சம்பவம் இனவெறி என சர்ச்சை கிளம்பியது


இந்தியாவில் அப்படி எல்லாம் இல்லை, இங்கு இனவெறி இல்லை, கருப்பான தமிழர்கள் கூட இந்தியனே என வட இந்திய திருகுறள் முனுசாமி தருண் விஜய் சொல்லிவிட்டாராம்


சர்ச்சைகள் வெடிக்கின்றன, முன்பு மலையாளி ஜெயராம் இப்படித்தான் சொல்லி சிக்கிகொண்டார்.




இந்த தருண்விஜய் ஏன் அப்படி சொல்லவேண்டும்? இந்தியாவில் தமிழர்கள் மட்டும்தான் கருப்பு நிறமா?


தருண் விஜய் எந்த நோக்கத்தில் சொல்லியிருந்தாலும் இது கண்டிக்கபடவேண்டிய ஒன்று என்பதில் மாற்றுகருத்து இல்லை, உண்மையில் இந்தியன் எனும் உணர்வே நம்மை எல்லாம் ஒருங்கிணைக்கின்றதே அன்றி நிறங்களோ, மொழிகளோ அல்ல‌


சரி இந்த முணுமுணுசாமி என்ன சொல்லியிருக்க வேண்டும்?


எங்கள் நாட்டின் கடவுள்களான ராமனும், கிருஷ்ணனும் கூட கருப்பு, அப்படித்தான் இதிகாசங்கள் சொல்கின்றன‌


அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சம்பந்தபட்ட பலர் கருப்பு நிறமே, குகன் முதல் விராட மன்னர்கள் வரை கருப்பர்களே


ஆக எங்கள் அவதாரங்களே கருப்பு எனும் பொழுது, எங்கள் நாட்டில் எப்படி நிறவெறி இருக்கும் என அவர் சொல்லியிருக்கலாம்


வீணாக தமிழர்களை இழுக்கும் அவசியம் வந்திருக்காது


எதற்கெல்லாமோ மதத்தை இழுப்பார்கள், இழுக்க வேண்டிய விஷயத்திற்கு இழுக்கமாட்டார்கள்...


ஆனால் ஒன்று, இவருக்கு தமிழர்கள் கருப்பாம். ஆனால் ஐரோப்பியருக்கு எல்லா ஆசியருமே கருப்பர்கள்தான், அது குஷ்பூ போன்ற குங்குமபூ நிறமாக இருந்தாலும் சரி


இதனை எல்லாம் மனதில் வைத்து தருண்விஜய் பேசலாம்



No comments:

Post a Comment