Wednesday, April 12, 2017

சரத்குமார் வீட்டில் இரண்டாம் முறையாக சோதனை

சரத்குமார் வீட்டில் இரண்டாம் முறையாக சோதனை, ராதிகா அலுவலகமும் சிக்கியது


அடித்து விரட்டினாலும், காலில் போட்டு மிதித்தாலும் அதிமுகவினை விட்டு போகமாட்டேன் என சரத்குமார் ஏன் அங்கேயே இருந்தார் என்பதற்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இலை என நம்புவோம்


தமிழகத்தில் சோதனைகள் தொடர்கின்றன, மதுக்கடை விவகாரத்தில் பெண்கள் களத்திற்கு வந்து போராடுகின்றனர், இன்னும் பல விவகாரமான போராட்டங்கள் தெரிகின்றன‌




விஜயபாஸ்கர் உட்பட பலர் குறிவைத்து வளைக்கபடுகின்றனர்


அதிமுகவில் தினகரன் குரல் தவிர யார் குரலும் கேட்கவில்லை, அவருக்கும் வழக்குகள் வலுக்கின்றன, எல்லா அதிமுக மேல்மட்ட முகங்களிலும் ஒரு அச்ச ரேகை படர்ந்திருப்பது தெரிகின்றது


ஏதோ இலக்கினை குறிவைத்து சில காரியங்கள் அவசரமாக‌ நடக்கின்றன, அதில் எடப்பாடி அரசினை மீன்பாடி வண்டியில் மல்லாக்க போட்டு தூக்கி செல்லும் திட்டமும் இருக்கலாம்



No comments:

Post a Comment