Monday, April 3, 2017

இனி யாரை மகா உத்தமன் ஆக்கலாம்?

முன்பொருமுறை கஜினி முகமது பற்றி எங்கேயோ எழுதியவுடன் வந்து பொங்கினார்கள்


கிட்டதட்ட அவன் படையெடுத்தது போலவே வந்து சூழ்ந்தார்கள், அவன் மனிதகுல மாணிக்கம் என ஏக அட்டகாசம்


அந்த உத்தமன் ஆப்கானை விட்டு சோமநாதபுரிக்கு ஏன் வந்தான் என்றாலும் விடுவதாக இல்லை....என்ன செய்ய வேறுவழி தெரியவில்லை




"கஜினி நல்லவன், சோமநாதரை வணங்கத்தான் வந்தான், திருப்பதி அன்றே விஷேஷமாக இருந்தால் இங்கும் வந்து வணங்கிவிட்டு மொட்டை அடித்து சென்றிருப்பான்


சோமநாதர் நிரம்ப ஆசீர்வதித்ததால் அவன் திருப்பதி, பழனி வரும் அவசியம் இல்லாமல் போயிற்று" என சொல்லி தப்பித்து ஓடி வந்தாயிற்று


இப்பொழுது வீர சிவாஜிக்காக மல்லு கட்ட தொடங்கிவிட்டார்கள், அவுரங்கசீப் எவ்வளவு உன்னதமானவன் தெரியுமா? ஏய் இஸ்லாமிய துரோகி என ஆரம்பித்தாயிற்று


விரைவில் அவுரங்கசீப்பும் பெரும் சிவ பக்தன் ஆனாலும் ஆகலாம்...


"ஆமாம் அவனுக்கும் சிவாஜிக்கும் சிவன் கோயிலை கட்டுவதில் வந்த, யார் சிறந்த அடியார்கள் என்ற போட்டியிலேயே சண்டை வந்தது , மோதிகொண்டார்கள் போதுமா.." என்று சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்


இனி யாரை மகா உத்தமன் ஆக்கலாம்?


அந்த கோரிமுகமது மட்டும் ஏன் வேறு இமேஜோடு இருக்க வேண்டும்? அவர்களையும் ஒரு நாள் புனிதராக்கி விடலாம்...



No comments:

Post a Comment