Wednesday, April 12, 2017

தலாக்.. தலாக்... தலாக் .... முத்தலாக்.....

"முத்தலாக் பற்றி குர்-ஆனில் எந்த குறிப்பும் இல்லை , முத்தலாக் என்பது கலிபா (கபாலி அல்ல) ஹசரத் உமரின் காலத்தில் தற்காலிக ஏற்பாடாக செய்யபட்டது.." என குடியரசுத் துணை தலைவரின் மனைவி சல்மா அன்சாரி


இவ்வளவுநாளும் இந்த பிரச்சினை பற்றி எறிந்தபொழுது அமைதி காத்த இந்த சல்மா அன்சாரி இப்பொழுது ஏன் குரானும் கையுமாக கிளம்புகின்றார்?


தாங்கள் இஸ்லாமியருக்கு எதிரி அல்ல, என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் பாஜகவிற்கு அலாதி பிரியம் உண்டு, முன்பு அப்படித்தான் அப்துல் கலாமினை ஜனாதிபதி ஆக்கினார்கள்




இன்னும் இரு மாதத்தில் குடியரசு தலைவர் தேர்தல் நடக்கலாம்


இதோ சல்மா அன்சாரி குரானை தூக்கிவிட்டார், இன்னும் பலர் இப்படி கிளம்பலாம், அதாவது ஒரு இஸ்லாமியர் குடியரசு தலைவர் ஆகலாம் எனும் அறிகுறிகள் இவை


அப்படி ஒருவரை ஆக்கிவைத்துவிட்டால் இந்த தலாக் போன்ற பிரச்சினைகளை அவரை வைத்தே பேசவைத்துவிடலாம், அந்த மார்க்க விவாதத்தை அவரே நடத்திகொள்ளலாம்..


இந்த சிக்கலிலிருந்து வெளிவந்த‌ பிரதமர் மோடி நம் மூன்றாண்டு சாதனை என்ன? என தமிழிசையிடம் , யோகி ஆதித்த்யநாத் இடமும் விசாரிக்க‌ கிளம்பிவிடலாம்...



No comments:

Post a Comment