Friday, April 7, 2017

ஜெயலலிதாவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது....


17796276_10208850737520853_6480758893204350456_n.jpg


பெரும் விசுவாசிகள் என்றால், ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுதே போர்கொடி தூக்கியிருக்கலாம்...


இப்பொழுதும் ஜெயா மர்மத்தில் மர்மம் இருந்தால், தகுந்த ஆதாரமிருந்தால் வழக்கு தொடுக்கலாம், போராடலாம்


அதனையெல்லாம் விட்டுவிட்டு ஆட்சி போனபின்பு கத்துவதும், ஜெயா பிணத்தோடு ஊர்வலம் செல்வதும் வேடிக்கையானது




ஜெயா சடலம் போன்ற உருவத்தோடு, அவர் ஊர்வலம் போகட்டும், ஒப்பாரி வைக்கட்டும், நீதி வேண்டும் என தனக்குதானே கேட்டுகொள்ளட்டும்


ஆனால் தேசியகொடியினை அந்த பிணபொம்மையின் மீது போர்த்தியிருப்பது எப்படி?


கட்சி பிரச்சாரத்தில் தேசியகொடிக்கு என்ன அவசியம்?


காட்டவேண்டியவர்கள் அப்பல்லோவினை காட்டட்டும், ஆம்புலன்சை காட்டட்டும், ஜெயா கால்கள் இல்லை என காட்டட்டும், கன்ன துளைகளை காட்டட்டும்


இந்த தேசியகொடியினை கொண்டுவர என்ன அவசியம்?


ஜெயா முதல்வராக இருந்தார், இந்த பொம்மையுமா முதல்வராக இருந்தது?


தேர்தல் கமிஷன் உடனடியாக தலையிட்டு இந்த பாண்டியராஜன் கும்பலின் பைத்தியக்கார தனத்தை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது


இவர்கள் வோட்டுக்காக எந்த கேவலத்திற்கும் செல்லட்டும், ஆனால் கண்ணியமிக்க தேசிய கொடியினை கொண்டுவருவது ஏன்?


இவரா இந்நாட்டின் மக்கள் பிரதிநிதி? சட்டத்தையும் தேசியகொடியினையும் மதிக்காத இவர் எப்படி நல்ல சமஉ???


இது அவரின் எம்.எல்.ஏ பதவியினையே பறிக்க கூடிய அளவு குற்றம் என்பது குறிப்பிடதக்கது


நிச்சயம் அந்த தேர்தல் கமிஷன் ஏதாவது செய்து தேசியகொடியின் மாண்பினை நிலை நிறுத்தட்டும்


இல்லாவிட்டால் அந்த பெருமை மிகு கொடியினை, எம்ஜிஆர் பொம்மைக்கு கர்சீப்பாகவோ, கோவணமாகவோ செய்து விடுவார்கள் இவர்கள்...



No comments:

Post a Comment