Wednesday, April 5, 2017

தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்: அய்யாக்கண்ணு

தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்: அய்யாக்கண்ணு


அப்படியே கந்துவட்டிக்காரன் கடனையும் முடிந்தால் அவனையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அக்கம்பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்தாலும் தள்ளுபடி வேண்டும்




ஒரு வங்கியும், ஒரு நிறுவணமும் இனி விவசாயிக்கு கடன் கொடுக்கவே கூடாது, கொடுத்ததால் தானே இவ்வளவு சிக்கல், அடுத்த‌ விவசாயி பணமே இன்றி அலையட்டும்


கொடுத்தால் முதலிலே இலவசம் என கொடுத்துவிடலாம், ஒரு போராட்டமும் இருக்காது..அப்படி கொடுத்ததை உடனே விவசாயி மறந்துவிடவும் வேண்டும்


எல்லாம் தள்ளுபடியானால் வங்கிகள் என்ன செய்யும்? அரசிடம் செல்லும்


தமிழக அரசின் கடனே 4 லட்சம் கோடி, மத்திய அரசின் கடன் அடுத்த ஆட்சியில்தான் தெரியும்


மக்களுக்காக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்தால், இந்த அரசாங்க கடனை யார் தள்ளுபடி செய்வார்??? அது என்ன செய்யும்?


அரசுகளே கோவணம் கட்டி அலையும்பொழுது அவைகளிடம் சென்று எல்லாம் தள்ளுபடி செய் என்றால் அது என்னதான் செய்யும்??



No comments:

Post a Comment