Monday, April 10, 2017

சிரியாவில் விஷவாயு வெடித்தவுடன்...

சிரியாவில் விஷவாயு வெடித்தவுடன் பொங்கி எழும் அமெரிக்கா, ஈழத்தில் சிங்களன் வீசும்பொழுது என்ன கிழித்துகொண்டிருந்தது? அந்த அமெரிக்காவினை கண்டிக்கின்றோம், தண்டிக்கின்றோம் என இந்த தமிழுணவாளர்கள் எவனாவது குதிப்பான், கத்துவான் கொடிபிடிப்பான் என்றால் சத்தமே இல்லை..


இவ்வளவுதான் இவர்கள் சிந்தனையும் ஆர்பாட்டமும்..


இன்று அப்பாவி சிரிய மக்களை விஷவாயு தாக்குதலிருந்து காக்கவே அத்துமீறி தாக்கினோம் என சொல்லும் அமெரிக்கா, இதே தாக்குதலை ராஜபக்சே ஆனந்தபுரத்தில் செய்தபொழுது என்ன செய்தது?




நிச்சயம் அமெரிக்காவிற்கு செக் வைக்கும் கேள்வி


ஆனால் இவர்கள் மகா அமைதி, யுத்தம் நடத்திய‌ அமெரிக்கா என்றால் கண்டிக்கமாட்டார்கள் கள்ள சிரிப்போடு ஓதுங்குவார்கள்.,


ஆனால் ஒதுங்கியிருந்த கலைஞரை ஆளாளுக்கு திட்டுவார்கள்


இதன் பெயர் "உணர்வு" என எல்லோரும் நம்பிகொள்ளுங்கள்..


விஷவாயு விவகாரத்தில் ஏன் தமிழ்மக்களை சாகவிட்டீர்கள் என கேட்டால், பதிலுக்கு புலிகளின் எல்லா கொடூரங்களும் அமெரிக்காவின் வாயாலே வெளிவரும் பின்விளைவு உண்டு


அதனால் அங்கிள் சைமன்,திருதிரு திருமுருகன், திருகு திருமா, கலெக்சன் வேல்முருகன், பாழாய் போன நெடுமாறன் எல்லாம் இதில் மகா அமைதி, வாய்ஸ் வைகோ சிறையில் மவுன விரதம்..



No comments:

Post a Comment