நாளை முதல் தினகரனுக்கு பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார்
இன்று செய்யமாட்டார், காரணம் இந்த நொடியில் அவர் பன்னீர் செல்வம் அணியில் இருக்கின்றார், அதனால் நாளைக்கு ...
நொடிக்கு 100 பல்டி அடிக்கும் கின்னஸ் சாதனையினை சரத்குமார் செய்துகொண்டிருக்கின்றார், இப்படி ஒரு அதிவேக பல்டி யாரால் அடிக்க முடியும்?
பாஜகவிற்கு ஓடி திரும்ப அதிமுகவிற்கு வந்ததை விட மகா வேகமானது இப்பொழுது நடந்தது
பன்னீர் செல்வத்தை ஆதரிக்கின்றேன் என சென்று முழங்கிவர் இவர்தான், இப்பொழுது தினகரனே தெய்வம் என வந்து நிற்பவரும் இவர்தான்
இவரையா விஷால் ஓட விரட்டினார், அதுவா சாதனை என்றார்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது.
இன்னும் தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கின்றது, அதற்குள் தீபா பக்கம் சென்றுவிட்டு, இவர் மறுபடியும் தினகரன் பக்கம் வந்தாலும் வரலாம்..
அது இருக்கட்டும்
சரத்குமாரை விமர்சித்தால் வெட்டுவேன் , குத்துவேன் என ஒருவன் அடிக்கடி சொல்லிகொண்டிருந்தான்
அவன் இம்சை இனி இருக்காது என நம்பலாம், இன்னும் சரத்குமார் விசுவாசி என்றால் அவனுக்கு வேறு ஏதோ கோளாறு, திருத்தவே முடியாது என முடிவு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment