Tuesday, April 4, 2017

பர பர செய்திகள் ....

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 21 வயது பெண் கேரளாவில் கைது, முகநூல் காதலால் சம்பவம் நடந்ததாக கேரளாவில் பரபரப்பு


வரவர ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்நாடு போய்விட்டது,


கொடூர காமுகச்சி கைது, அப்பாவி ஆணுக்கு என்ன நீதி? என ஒரு பத்திரிகையாவது எழுதுகின்றதா? இல்லை





பெண்ணாதிக்கம் ஒழிக‌.....

ஆனாலும் 17 வயது பையன் முகநூலில் ஏதோ சாதித்திருக்கின்றான், நாமெல்லாம் எழுதி என்ன கிடைத்தது ஒன்றுமே இல்லை..

நாமெல்லாம் முகநூலுக்கு சரிவர மாட்டோம் என்பது மட்டும் புரிகின்றது..







வடமாநில ஓட்டுனர்களுக்கு உதவவே மைல் கற்களில் இந்தி - பொன்.ராதாகிருஷ்ணன்


தமிழக டிரைவர்கள் வடக்கே செல்லும்பொழுது உதவுவர் யார்?


அங்கே உள்ள மைல் கற்களில் தமிழில் எழுதினால் எவ்வளவு உதவியாக இருக்கும்?




வட மாநில டிரைவர்களுக்கு உதவியது போல தமிழக ஓட்டுநர்களுக்கு இந்த‌ உதவியினையும் செய்யுங்கள் மிஸ்டர் ராதாகிருஷ்ணன்.






அதிமுகவின் இரு அணிகளும் மக்களைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின்


அது இரு அணிகளாக பிரிந்த பின்னும் அக்கட்சியினை பற்றி ஏன் இவர் கவலைபட்டு கொண்டே இருக்கின்றார்..







 

No comments:

Post a Comment