Tuesday, April 4, 2017

விஜய் சேதுபதி....

17796799_10208818920445446_1664896433464502206_n.jpg


கவண் படத்தின் புரமோஷன் டிவி காட்சியில் "விஜய்சேதுபதி" பேசிகொண்டிருந்தார்


மனிதர் இன்றுள்ள நடிகர்களில் யதார்த்தமான நடிகர், இன்று "நடிக்கும்" மிகசில நடிகர்களில் முக்கியமானவர், நொடியில் முகபாவம் மாற்றும் வித்தை அவருக்கு லாவகமாக வருகின்றது,


முக்கியமாக அவர் படங்களை எரிச்சல் இல்லாமல் பார்க்க முடிகின்றது..




நல்ல நடிகர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கின்றார், இனி குஷ்பூவுடன் ஏதாவது ஒரு காட்சியில் நடித்தால் மட்டுமே அவர் திறமைக்கு சவால் வரும், அதனால் அக்காட்சியினை அவர் தவிர்த்துகொண்டே வருகின்றார்


அந்த காட்சியில் நன்றாக பேசினார், தலைக்கணம் என்பது அவர் பேச்சில் இல்லை, மாறாக உடல்கணம் என்பது தெரிந்தது


உடல் எடை நன்றாக கூடிவிட்டிருப்பது தெரிந்தது, இப்படியே சென்றால் நிச்சயம் அது அவரின் சினிமா எதிர்காலத்தினை பாதிக்கலாம்


தலையில் கணம் ஏற்றாத நல்ல நடிகர், உடலிலும் கணம் ஏறாமல் பார்த்துகொண்டால் நல்லது..



No comments:

Post a Comment