Friday, April 7, 2017

சோதனை மேல் சோதனை .... போதுமடா சாமி..


17799206_10208852437523352_8255718088358424307_n.jpgஆர்.கே நகரில் பணத்தினை அள்ளி வீசுகின்றார்களாம், அவர்கள் ஆயிரம் என்றால் இவர்கள் இரண்டாயிரம், இவர்கள் இரண்டாயிரம் என்றால் அவர்கள் மூவாயிரம்...


ஆக வாக்கு ஆரம்பம் ரூபாய் ஆயிரம்... இரண்டாயிரம்.. 4 ஆயிரம்.... 6 ஆயிரம் என பாண்டியராஜன் காமெடி போலவே வாக்கு ஏலம் நடக்கின்றது


நடக்கட்டும், முடிவில் இவர்களுக்கு கிடைக்கபோவதென்னமோ "பிம்பிலிக்கி பிலாக்கி...




குறிப்பாக "மாமாவுக்கு பிஸ்கோத்து...."







 17522754_10208852010112667_6941715489771291328_n.jpg


அக்காவிற்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா?


இவர்களிடம் பணம், பிணம் எல்லாம் கிடையாது


மசூதி இடித்தல், மாட்டு தொழுவம் கட்டுதல் போன்ற "பில்டிங்" அரசியல்தான்.





அதனால் விழும் பிணம் பற்றி, அதில் சிலருக்கு குவியும் பணம் பற்றி எல்லாம் நாம் பேசகூடாது.

வெள்ளிகிழமை அதுவுமாக சுற்றிபோட சொல்லவேண்டும், அக்காவிற்கு திருஷ்டி பட்டாலும் படும்..





சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை


ஏதோ ஆங்காங்கே பல்டி அடித்து, ஜம்ப் செய்து ஐந்து, பத்து என எப்படியோ திரட்டி வாழ்ந்து கொண்டிருகின்றார்


அவர் மீதெல்லாம் வருமானவரி சோதனையா? இது என்ன சோதனைக்கே வந்த சோதனை





இதெல்லாம் அவரை கலாய்க்கும் செய்திபோலவே இருக்கின்றது.

ஒருவேளை இது விஷாலின் திட்டமிட்ட சதியாக இருக்கலாமோ?





சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை


"உலக சுகாதார நாள்" என சொல்லபடும் இன்றைய தேதியினை தமிழகத்தில் எப்படி சிறப்பிக்கின்றார்கள் பார்த்தீர்களா?


இம்மாதிரி கொண்டாட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.





உலக சுகாதார நாளில் தமிழக சுகாதர துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை

தமிழக சுகாதாரத்தை நமது அமைச்சர் அப்படி காப்பாற்றியிருக்கின்றார்...






விஜயபாஸ்கர் வீட்டில் நடக்கும் சோதனை எங்கள் வெற்றியினை தடுக்கவும், எங்கள் நற்பெயரை கெடுக்கவுமான சதி : தளவாய் சுந்தரம்



என்ன கட்சி ராசியோ தெரியவில்லை, நாஞ்சில் சம்பத் இடத்தினை யாராவது பிடித்துகொண்டே இருக்கின்றார்கள்

இந்த கட்சிக்கு எங்கு நல்லபெயர் இருக்கின்றது? அண்டார்டிக்காவின் அடியிலா?




என்னிடம் பணமில்லை, அவர்கள் கொடுத்து விட்டுப் போனால் நல்லது: வருமான வரி சோதனை குறித்து சரத்குமார்

ராதிகா முதல் ஜெயா, சசிகலா டிடிவிதினகரன் வரை இவர் இதனைத்தான் சொல்லிகொண்டிருக்கின்றார், கொஞ்சம் கறந்துகொண்டும் இருந்தார்

சோதனை செய்ய வந்த அரசு அதிகாரிகளிடமும் அதனைத்தான் சொல்லவேண்டுமா?

ஒரே டயலாக்கினை கண்ணில்படுவோரிடம் எல்லாம் சொல்லி திரிந்தால் இப்படித்தான்...

பழக்கதோஷம்




 

No comments:

Post a Comment