Wednesday, May 3, 2017

சுஜாதா எழுதவே அவதரித்த நாள் இன்று ....




Image may contain: 1 person


பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது.


அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை


நான் ஒரு எழுத்து மலைக்காடு, யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது





சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம் முதல் விண்வெளி வரை எல்லா துறையிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது மகா ஆச்சரியம், அவரின் தேடல் அப்படி இருந்திருக்கின்றது..

பணத்திற்கு எழுதுவதை விட , மனதில் ஊறும் விஷயங்களை ஆத்ம திருப்திக்கு எழுதுவதே எழுத்தாளன் வாழ்வின் சுதர்மம் என சொல்லி சென்ற அந்த சுஜாதாவின் பிறந்த நாள் இன்று

மனதிருப்தி கொடுக்கும் எழுத்துக்களின் விலையினை எந்த தொகையும் நிர்ணயிக்காது என்பதே அவரின் வாழ்வு தத்துவம்

எப்பொழுதாவது அபூர்வமாக தமிழகத்தில் பிறக்கும் அறிவாளிகளில் ஒருவரான அவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறலாம்

சாட்சாத் அந்த ஸீரிரங்கத்து ரங்கநாதன், எழுதவே அவதரித்த நாள் இன்று











 


 

No comments:

Post a Comment