Wednesday, May 3, 2017

கொடநாடு காவலாளி கொலை.....

கொடநாடு காவலாளி கொலை, அதன் பின் ஜெயா ஓட்டுநருக்கு விபத்து என பல மர்ம சம்பவங்கள் நடக்க தொடங்கியிருக்கின்றன‌


தமிழகம் மறுபடியும் ஆட்டோ சங்கர் காலத்திற்கு திரும்பிகொண்டிருக்கின்றதோ எனும் அச்சம் வருகின்றது


ஜெயா மரணத்திற்கு சிபிஐ விசாரணை என்பதை விட, இந்த மரணங்களுக்கு சிபிஐ விசாரணை என்பதே பொருத்தமானது, பல மர்மங்கள் அவிழலாம்




அந்த பூங்குன்றன் என்பவர் கிடைத்தாரா? இல்லையா? என்பது பற்றி சத்தமே இல்லை


நடக்கும் சம்பங்களை பார்த்தால், டைரக்டர் ஆர்.கே செல்வமணிக்கு அட்டகாசமான கதை கிடைத்திருக்கின்றது என்பது தெரிகின்றது


புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் வரிசையில் அவர் தூள் பறத்தலாம்...., அப்படியான திகில் சம்பவங்கள் நடக்கின்றன‌


கொஞ்சம் உடல்நலமிருந்தால் விஜயகாந்தே ஆர்.கே செல்வமணிக்கு அழைப்பு விடுத்திருப்பார்..



No comments:

Post a Comment