Friday, March 3, 2017

மோடியினை சந்தித்தார் பெப்சி அதிகாரி இந்திரா நூயி







Image may contain: 2 people, people sitting









மோடியினை சந்தித்தார் பெப்சி நிர்வாக அதிகாரி இந்திரா நூயி


தாமிரபரணி ஆற்றின் நீரை பெப்சி,கோக் கம்பெனிகள் எடுக்க நீதிமன்றம் அனுமதி


இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் தொலையட்டும்




கடும் பஞ்சத்தில் தமிழ்நாடு சிக்கியிருக்கும் வேளையில் தாமிரபரணி நீரினை எடுத்து வெளிநாட்டுக்கு கோக், பெப்சி என ஏற்றுமதி செய்யலாமாம்


இந்த வழக்கிற்கு யார் டெல்லி வரை 18 வருடம் வழக்கு தொடுப்பார்கள்? ஒருவரும் இல்லை


சரி யார் போராடுவார்கள்?


எந்த கொம்பனும் நெல்லைக்கு வந்து மணல் குவாரி பற்றியோ, கனிம வளம், கல்குவாரி கொடுமைகள் பற்றியோ ஒரு காலமும் பேசமாட்டான்


தாமிரபரணி நீரை உறிஞ்சும் நெல்லை பெப்சி டீலர் யார்? அந்நீரை வெளிநாட்டுக்கு விற்கும் தமிழின துரோகி யார் என்றெல்லாம் பேசமாட்டார்கள்


வடக்கத்த்தியான் வந்து மீத்தேன் எடுத்தால் அது தமிழர் அழிப்பு, ஆனால் தமிழன் தாமிரபரணியினை விற்றால் மூச்ச்ச்ச்ச், மீறி கேட்டால் உச்சா போய்விடுவார்கள்


இதுதான் தமிழின உரிமை, பாதுகாப்பு போராட்டம்


மீத்தேன் எரிகாற்று என நெடுவாசலில் புலம்பும் சீமானையோ, வைகோவினையோ கனிம மண், கல்குவாரியால் பாதிக்கபட்டிருக்கும் நெல்லை தேரிகாட்டு, வயல்காட்டு பக்கம் வர சொல்லுங்கள் வரமாட்டார்கள்


எல்லோருக்கும் ஒரு நீதி, நெல்லைக்கு மட்டும் தனி நீதி,


அது அண்ணாச்சிமாரின் மண்ணுக்கு நீதி


அமெரிக்காவில் இருந்து இந்திரா நூயி வருகின்றார், மோடியினை சந்திக்கின்றார், உடனே தாமிரபரணி தடை நீங்குகின்றதென்றால்


தென்னாட்டு தாமிரபரணி யார்கையில் இருக்கின்றது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை


பெரும் வல்லமை படைத்த பெப்சி கம்பெனியின் தலமையினை, இந்திய தலமையுடன் சந்திக்க வைக்கும் அளவிற்கு சக்தியானவர்கள் இங்கேதான் இருக்கின்றார்கள்


மகா மர்மமான தமிழ்நாடாக போய்விட்டது


இதனை பிரதமரிடம் தான் கேட்கவேண்டும், எப்படி கேட்கலாம்? எப்படி சந்திக்கலாம்?


அப்பாயின்மென்ட் எல்லாம் அவர் யாருக்கும் கொடுப்பதில்லை, மகா பிசி. 24 மணி நேரமும் நாட்டை பற்றியே சிந்திப்பவர், பின் எப்படி?


நாம் சிந்திக்கலாம்


ஏதும் சாமிசிலை செய்து திறக்கலாம், கண்டிப்பாக பிரதமர் வருவார். மடக்கி வைத்து கேட்டுவிடலாம்.


கவனியுங்கள் தாமிரபரணியினை சுரண்ட வந்திருக்கும் இந்திரா நூயி ஒரு தமிழச்சி, பெப்சியின் நெல்லை டீலர் ஒரு தமிழன்


தாமிரபரணியினை தாரைவார்த்திருப்பது தமிழக நீதிமன்றம்


ஆனால் இவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள் இல்லை, இல்லவே இல்லை


அது கோபாலபுரத்தில் அந்திம காலத்தில் படுத்திருக்கும் கலைஞர் மட்டுமே, இப்படி சொன்னால்தான் அது தமிழுணர்வு



No comments:

Post a Comment