Friday, March 3, 2017

டிரம்பின் பிரிட்டன் பயணம் மக்களின் எதிர்ப்பால் ரத்து




Image may contain: one or more people


டிரம்பின் பிரிட்டன் பயணம் பிரிட்டன் மக்களின் எதிர்ப்பால் ரத்து


அமெரிக்கா போலவே டிரம்பிற்கு உலகமெல்லாம் எதிர்ப்பு வலுக்கின்றது, அமெரிக்காவின் தாய்நாடான பிரிட்டன் செல்ல கடும் தயாரிப்புகளோடு கிளம்பினார் டிரம்ப்


தயாரிப்பு என்றால் சவுதி அரசர் கிழக்காசிய பயணத்திற்கு கிட்டதட்ட சவுதி அரண்மனையினை பெயர்த்துகொண்டு வந்திருக்கின்றார் அல்லவா? அப்படி அல்ல.





சவுதி அரசர் கிழக்காசிய பயணத்திற்கு தன் தங்க கூரை விமானத்தில் வந்திருக்கின்றார், அவருக்கு துணையாக கிட்டதட்ட 2000 பேர் வந்திருக்கின்றார்கள்

கார் உட்பட அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களின் எடை 600 டன்கள், மனிதர்கள் இதில் சேர்க்கபடவில்லை

ஆக கிட்டதட்ட ரியாத்தின் அரண்மனையினை பெயர்த்தெடுத்து தங்க விமானம், தங்க கார் என கிழக்காசியாவிற்கு ஷோ காட்டிகொண்டிருக்கின்றார் சவுதி மன்னர்

அவருக்கென்ன அல்லாஹ் அப்படி அள்ளி கொடுத்திருக்கின்றான், கூரையினை பிய்த்து கொடுக்காமல் , கூரையினையே தங்கமாக கொடுத்துவிட்டான்

டிரம்ப் அப்படி எல்லாம் கிளம்பவில்லை, வழக்கமான பாதுகாப்போடு கிளம்ப நினைத்தார், பிரிட்டன் மக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் வருகை தள்ளிபோடபட்டிருக்கின்றது

அப்படி பெரும் எதிர்ப்பினை பிரிட்டன் மக்கள் டிரம்பிற்கு எதிராக பதிவு செய்துவிட்டார்கள்.

இனி இது உலகம் முழுக்க பரவலாம்

பிரிட்டன் செல்லவே இந்தபாடு படும் டிரம்ப், இந்தியா வருவதெல்லாம் இனி நினைத்துபார்க்கமுடியுமா?

ஒருவேளை இந்திய மக்களும் இப்படி எதிர்த்தால் அவர் எங்கு செல்வார்?

அவருக்கா இடமில்லை, நேரே பாகிஸ்தானுக்கு சென்றாலும் செல்லலாம்

இந்தியா விரட்டிவிடுபவர்களுக்கு எல்லாம் அவர்கள் தானே புகலிடம்

ஆனாலும் டிரம்பின் நிலை இப்படி சிக்கலாகியிருக்க கூடாது

இது கூட பரவாயில்லை, சிரியாவில் அமெரிக்க துருப்புக்களை போட்டு சாத்தியிருக்கின்றது ரஷ்யா

சாத்திவிட்டு அவர்கள் வழக்கமாக சொல்லும் வழிதவறி, குறி தவறி நடந்த தாக்குதல் என சொல்லியிருக்கின்றது

அவர்கள் குறி ஒருநாளும் தப்பாது, போட்டு அடித்துவிட்டு அடிக்கடி
ஏவுகனை, விமானம், கப்பல் வழிதவறியது என சொல்லிகொள்வார்கள்

இதற்கும் டிரம்ப் பெரும் எதிர்ப்பு காட்டியதாக தெரியவில்லை, உலகளவில் இது ஒரு அமெரிக்க அவமானம்தான்

அதிமுக பாஜகவிடம் சிக்கி இருப்பது போல் டிரம்ப் புட்டீனிடம் சிக்கி இருக்கலாம் என சில செய்திகள் உண்டு

என்ன செய்வது?

அன்னார் பதவி ஏற்று இன்னும் 2 மாதம் கூட முடியவில்லை, அதற்குள் ஆயிரம் சிக்கல்கள் அவருக்கு

வீராப்பு பேசிவிட்டு இப்பொழுது தலையில் கை வைத்து அமர்ந்திருக்கின்றார் டிரம்ப்.













 


 

No comments:

Post a Comment