Monday, December 5, 2016

ஒழுக்கமான போராளி காஸ்ட்ரோ...

ஒரு மனிதன் எதிரி என முடிவு செய்துவிட்டால் அவன் நற்பெயரை அவன் செத்தபிறகும் விடமாட்டார்கள் வெள்ளையர்கள்


பல புரளிகளை கிளப்பிவிடுவார்கள், உச்சகட்டமாக பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவார்கள்


முன்பு இந்தோனேஷியாவில் சுகர்தோ என்றொரு அதிபர் இருந்தார், மேற்குலக எதிரி, சொல்லி பார்த்தார்கள் புரியவில்லை மனிதர் மீது பாலியல் கேசட் என பரவவிட்டார்கள். எப்படி? அவரை போலவே இருந்த ஒருவனை வைத்து நீலப்படம் எடுத்து அவரை சந்தி சிரிக்க வைத்தார்கள்




லிபிய அதிபர் கடாபி மீது வேறு மாதிரியான பாலியல் அவதூறுகளை பரப்பிவிட்டு சந்தோஷபட்டார்கள்


இப்பொழுது காஸ்ட்ரோ முறை


இதுவரை 350000 பெண்களுடன் காஸ்ட்ரோ உறவு வைத்தார் என ஆங்கில பத்திரிகைகள் அள்ளிவிடுகின்றன,


அதாவது உலகமே காஸ்ட்ரோவினை நினைத்து பேசிகொண்டும், அவரின் போராட்டங்களை சிலாகித்துகொண்டும் இருக்கும்பொழுது
கவனத்தை திருப்ப செய்யும் உத்தி இது


உலக பத்திரிகா தர்மம் அப்படி இருக்கின்றது, அவர்கள் சொன்னதே செய்தி.


பெரும் உளவு நிறுவணங்களின் சக்தி மிக்க ஆயுதம் அழகான பெண்கள், அந்த பெண்கள் மூலம் மொசாத்தும், சிஐஏயும் சாதித்தது கொஞ்சமல்ல‌


காஸ்ட்ரோ அப்படிபட்டவராக இருந்திருந்தால் என்றோ சில ஈராக்கிய‌ அணு விஞ்ஞானிகள் போல போட்டு தள்ளியிருப்பார்கள்


ஒழுக்கமான போராளி என்பதாலேயே காஸ்ட்ரோ இத்தனை வயது வரை வாழ முடிந்தது


சில இடங்களில் இயேசு கிறிஸ்துவினையே இம்மாதிரி போட்டு தாக்குபவர்களுக்கு காஸ்ட்ரோ எம்மாத்திரம்?


அவர்கள் அப்படித்தான், ஆனால் உலகம் இதனை எல்லாம் புன்னகைத்து ஒதுக்கிவிடுகின்றது.



No comments:

Post a Comment